பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் பெற பொது இ சேவை மையத்தை அணுகலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2015

பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் பெற பொது இ சேவை மையத்தை அணுகலாம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களிலும் பொது இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.இம்மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் காலை 9.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும்.ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கெனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து ஒப்புகைச்சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையங்களுக்குச் சென்று, ஒப்புகைச் சீட்டில் உள்ள பதிவு எண்ணை தெரிவித்து     பிளாஸ்டிக் ஆதார் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஓப்புகைச்சீட்டு பதிவு எண்ணைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ரூ.40 கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே ஆதார் எண் கிடைக்கப்பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டைபெற விரும்பினால், ஆதார் எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டைபெற்றுக்கொள்ளலாம். இதற்கு ரூ.30 கட்டணம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி