டாக்டர்கள் மருந்து சீட்டில்இனி கிறுக்க முடியாது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2015

டாக்டர்கள் மருந்து சீட்டில்இனி கிறுக்க முடியாது

நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்து சீட்டில், மருத்துவர்கள் இனி படிக்கக்கூடிய வகையில் தெளிவாகவும், பெரிய எழுத்துகளாலும் எழுதுவது கட்டாயமாகிறது.இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நோயாளிகளுக்கு தரும் மருந்து சீட்டில்,
மருத்துவர்கள் இனி தங்களது இஷ்டம் போல் கிறுக்க முடியாது.இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின் கீழ், இதற்கென, அரசிதழில் அறிவிப்பை சுகாதார அமைச்சகம் மிக விரைவில் வெளியிட உள்ளது.

அதன்படி, மருத்துவர்கள் இனி, நோயாளி களுக்கு தரும் மருந்து சீட்டில், தெளிவாகவும், பெரிய எழுத்துகளாலும் எழுத வேண்டியது கட்டாயம். மேலும், நோயாளிகளுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைப்பதற்கு உதவும் வகையில், மருத்துவர்கள் இனி பரிந்துரைக்கும் மருந்து சீட்டில், மருந்தினுடைய பிராண்ட் பெயரை எழுதாமல், பொதுப் பண்பு அடிப்படையிலான பெயர்களைமட்டுமே பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி