SSTA சார்பாக அரசு உயர் அதிகாரிகள் சந்திப்பு -ஆசிரியர் பொது கலந்தாய்வு ஜூலை மாதம் ,CRC spl leave வழங்க மறுக்கப்படும் ஒன்றியங்கள் ,3500 ஆசிரியர்களுக்கு பின்னேற்பு!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2015

SSTA சார்பாக அரசு உயர் அதிகாரிகள் சந்திப்பு -ஆசிரியர் பொது கலந்தாய்வு ஜூலை மாதம் ,CRC spl leave வழங்க மறுக்கப்படும் ஒன்றியங்கள் ,3500 ஆசிரியர்களுக்கு பின்னேற்பு!!!

16.06.2015 SSTA -வின் மாநில பொறுப்பாளர்கள் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர்,தொடக்கக் கல்வி இயக்குநர்,அரசு முதன்மைசெயலாளர் நிதிதுறை,அரசு முதன்மை செயலர் (செலவீனம் )ஆகியோர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் பற்றி பேசப்பட்டது.

1.ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு பற்றி கேட்கப்பட்ட போது ஜூலை மாதம் நடைபெறும் என்று அரசின் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

2.SSTA சார்பாக ஆறு மாதமாக போராடி பெற்று தந்த (CRC பயிற்சிக்கு சிறப்பு ஈடு செய்யும் விடுப்பு) விடுப்பு பற்றியும் அதில் ஏற்படும் நடைமுறை சிக்கல் பற்றியும் (ஈடு செய் சிறப்பு விடுப்பு அரசாணை எண் -2218/81 )கல்வி துறைக்கு என்று பிறப்பிக்கப்படவில்லை அரசு ஊழியஊழியர்களுக்காக பிறப்பிக்கப்பிக்கப்பட்டது அதில் குழப்பங்கள் உள்ளன எனவே கல்வித்துறைக்கென்று ஓர் தெளிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது இனி ஈடு செய் விடுப்பு அந்தந்த கல்வி ஆண்டில் எ டுக்க வேண்டும் என கடிதம் பிறப்பிக்கப்படும் என உறுதி கூறினர். .ஒரு சில மாவட்டங்கள்,ஒன்றியங்களில்விடுப்பு மறுக்கப்பட்டு வருவதை பட்டியலிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்ஏதேனும் ஒன்றியங்களில் விடுப்பு மறுக்கப்பட்டால் உடனே Ssta மாநில செயலரை தொடர்பு கொள்ளவும்-Phone :9843156296 ஈடுசெய் அரசாணை வாதாடி பெற்றுத்தந்த SSTA அதன் பயனை ஆசிரியர்கள் அனைவரும் பெறும் வரை ஓயாது ...

3.உயர்கல்வி பயின்றமைக்கு பின்னேற்பு வழங்குவது குறித்து கேட்கப்பட்டது அனுமதி பெறாமல் பயின்றவர்களின் எண்ணிக்கை 3500 எனவும் அப்பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்களுக்கு அனுமதி அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

4.பின்னர் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர்(SSA-SPD)திருமதி. பூஜா குல்கர்னி அவர்களை சந்தித்துSSA பயிற்சிகளுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மதிப்பூதியம் ரூ.50 வழங்கப்பட்டு வருவதாகவும் அதை ரூ.200 ஆக உயர்த்தி வழங்குமாறு SSTA சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது மேலும் இந்தாண்டு நடைபெறவுள்ள CRC நாட்கள் தேதி முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என கோரிக்கை. வைக்கப்பட்டது அதை கண்டிப்பாக நிறைவேற்றுவதாகவும் மதிப்பூதியம் உயர்த்திதருவது பற்றி (அனைத்து மாநிலங்களிலும் ரூபாய் 50 மட்டுமே வழங்கி வருவதாகவும் இதுபற்றி மத்திய சர்வ சிக்‌ஷயான் அபியான் திட்ட இயக்கத்தில் கோரிக்கை வைத்து பெற்று தர முயற்சிப்பதாகவும்) கனிவோடு தெரிவித்தார்கள்.மேலும். விரிவாக இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.

Thanks To,
SSTA

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி