TNTET: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு:2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2015

TNTET: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு:2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள்,
அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.மத்திய அரசு இச்சட்டத்தை கடந்த 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி நடைமுறைப்படுத்தியது. தமிழகத்தில் இதுதொடர்பான அரசாணை கடந்த 2011 நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. முதலாவது தகுதித் தேர்வு 2012-ல் தான் நடத்தப்பட்டது.
சட்டம் அமல்படுத்தப்பட்ட 5 ஆண்டுகளில்தமிழகத்தில் 3 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.மேற்கண்ட சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. பல ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனாலும், பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருவதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 ஆண்டு அவகாசம் என்பது மத்திய அரசின் இலவச கல்விச் சட்டம் அமலுக்கு வந்த 2010 ஆகஸ்ட் முதல் கணக்கிடப்படுமா, தமிழக அரசாணை வெளியிடப்பட்ட 2011 நவம்பர் முதல் கணக்கிடப்படுமா என்ற குழப்பம், ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது.தமிழக அரசாணை வெளி யிடப்பட்ட 2011 முதல்தான் அந்த 5 ஆண்டு அவகாசம் கணக்கிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா தற்போது விளக்கம் அளித்துள் ளார். இதுதொடர்பான உத்தரவு பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக் கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி, அரசு அளித்துள்ள 5 ஆண்டு அவகாசம் 2016 நவம்பர் 15-ம் தேதியுடன் முடிந்துவிடும். அதற்குள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடவேண்டும். அதுவரையிலும் தேர்ச்சி பெறாவிட்டால் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுமா, ஆசிரியராகப் பணியாற்றும் தகுதியை அவர்கள் இழப்பார்களா என்பது குறித்து அந்த உத்தரவில் எதுவும் கூறப்படவில்லை.

30 comments:

  1. தேர்வு நடத்தாமல் எப்படி தேர்ச்சி பெறுவது

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நண்பர் சுருளி வேல் அவர்களே ...
      தங்களிடமிருந்து இப்படியொரு பொறுப்பற்ற கேள்வியா ???????????????

      அம்மா விடுதலை ஆகிவிட்டார் .. அம்மாவின் வருகைக்காக " அன்போடு (????)" மக்களின் பேராதரவுடன் , நிறுத்தி வைக்க பட்ட மக்கள் நல பணிகள் இனி தொடங்கும் என கூறாமல் ....
      போங்கள் நண்பரே ....
      சரியாக சப்தம் கேட்க வில்லை நண்பரே

      Delete
  2. Sure 82 than... Last tet Ku mattum than case poyikittu irukku... Anda case sum success ayidum...

    ReplyDelete
  3. anyone want mutual transfer from perambalur dist,ariyalur dist,cuddalore dist other dist to madurai dist call me 9626765676 english bt

    ReplyDelete
  4. Replies
    1. இலலை 75 எடு்த்தால் போதூம் ஏனென்றால் 2016 சட்டமன்றத் தோ்தல் வருகிறது ஆகயைால் சலுகை

      Delete
    2. இலலை 75 எடு்த்தால் போதூம் ஏனென்றால் 2016 சட்டமன்றத் தோ்தல் வருகிறது ஆகயைால் சலுகை

      Delete
  5. Any one want matual transfer fmadurai ramanathapuram to gudalur contact me 9751639889

    ReplyDelete
  6. Any one want mutual transfer from madurai r ramanathapuram to gudalur contact me 9751639889 ... maths bt

    ReplyDelete
  7. Any one want mutual transfer from madurai r ramanathapuram to gudalur contact me 9751639889 ... maths bt

    ReplyDelete
  8. sgt adw list eppo

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  9. 2011 september appointment tet ezhudhanuma?

    ReplyDelete
  10. 75 vanthakuda varum thala neega sonna mathiri.

    ReplyDelete
  11. 75 vanthakuda varum thala neega sonna mathiri.

    ReplyDelete
  12. 75 vanthakuda varum thala neega sonna mathiri.

    ReplyDelete
  13. Nenga 75 vachukonga evlo venom nalum k than ana 90 above Ku ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி