மத்திய அரசு துறைகளில் 1000 இளநிலை பொறியாளர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2015

மத்திய அரசு துறைகளில் 1000 இளநிலை பொறியாளர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1000 இளநிலை பொறியாளர் (குரூப் பி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையான
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இளநிலை பொறியாளர்

காலியிடங்கள்: 1000வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி கணக்கிடப்படுகிறது.

தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4,200.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: http://ssconline.nic.in அல்லது http://ssconline2.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.12.2015

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: பகுதி I - 07.08.2015, பகுதி II - 10.08.2015

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://vacancycollection.nic.in/ssc/notice/examnotice/final_Notice_JE_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி