பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆக.1-ல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2015

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆக.1-ல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பொறியியல் பொது கலந்தாய் வின் முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறும். இதற்கு ஜூலை 31-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண் டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250 மட்டும்.விண்ணப்பிக்க வரும்போது, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 ஹால்டிக்கெட், நிரந்தர சாதிச்சான்று, முதல் தலை முறை பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் இவற் றின் நகல்களையும் கொண்டுவர வேண்டும்.கூடுதல் தகவல்களை www.annauniv.edu/tnea2015 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி