ஊதியமும் கிடையாது, பணிமாறுதலும் கிடையாது!!! அரசாணை எண்-200 ,232 ஐ கண்டித்து SSTA விரைவில் போராட்டம்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2015

ஊதியமும் கிடையாது, பணிமாறுதலும் கிடையாது!!! அரசாணை எண்-200 ,232 ஐ கண்டித்து SSTA விரைவில் போராட்டம்!!!

SSTA அரசாணை எண் -- 232. Dt. 10.07.2015 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2015-16 வழிகாட்டி நெறிமுறைகள். வ.எண். 4ல் ஆசிரியர் ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என உள்ளது அதாவது ஓர் ஆசிரியர் 01.06.2012 க்கு முன் பணியேற்று இருந்தால் மட்டுமே இந்த ்-2015 பொதுமாறுதலில் கலந்து கொள்ள முடியும்.
இது ஆசிரியர்களிடையே அதிர்ப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் மாநில அளவில் பணி நியமனம், பணி மாறுதலும் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் குடும்பங்களைப் விட்டுப்பிரிந்து வெகு தொலைவில் பணியாற்றி வருகின்றனர் .

கடந்த ஆண்டுகளில் இந்த கட்டுப்பாடு ஒரு கல்வியாண்டாக இருந்ததது. இந்த அரசாணையால் தகுதி தேர்வு மூலம் பணியேற்றவர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது, இந்த உத்தரவினால் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்தாய்வு ஏக்கம் கனவாக போய்விடும் ,கடந்த வாரத்தில் 6 வது ஊதியக்குழு குறைகளை இனி கேட்கமாட்டோம் என்ற அரசாணை எண்-200 இந்த வாரத்தில் -232 அரசாணை ஆக மொத்தம் ஊதியமும் வழங்கமாட்டோம், பணிமாறுதலும் தரமாட்டோம் என்று தொடர்ந்து ஆசிரியர்களுக்கு விரோதமான இந்த இரு உத்தரவினை உடனடியாக மாற்றிட வேண்டும் .

இதை SSTA வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இதை எதிர்த்து போராட்டம் விரைவில் நடைபெறும். உணர்வுக்கு குரல் கொடுப்போம்!!! உரிமைக்கு உயிர் கொடுப்போம்!!! வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் நம் வாழ்வு ???? ஆசிரியர்களுக்கான SSTA...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி