வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2015

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள்


நிதியாண்டு 2014-15-க்கான வருமான வரியை சம்பளதாரர்கள் தாக்கல் செய்ய வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாள் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வருமான வரித் துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:


"சம்பளம், வீடு மூலம் வருமானம் பெறுவோர், தனியாக தொழில் செய்வோர்
என தணிக்கைக்கு உட்படாத வகையில் வருவாய் பெறுவோர் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தணிக்கைக்கு உட்பட்டு வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வோர் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
எளிய படிவம்: மாத ஊதியம், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு மூலம் வருவாய் பெறுவோர் பயன்படுத்த இந்த ஆண்டு "ஐடிஆர்-2ஏ' என்ற எளிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் 80 வயதுக்குக் கீழே உள்ளோர், கீழ்க்கண்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் மின்னணு முறையில் மட்டுமே வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்:-

 1. ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளோர்;
 2. வருமான வரிப் பிடித்தத் தொகையைத் திரும்பப் பெறக் கோருவோர்;
 3. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் அல்லது தொழில் மூலம் வருமானம் ஈட்டுவோர்.

 அலுவலக எல்லையை தெரிந்துகொள்ள...
 வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர், தங்களது வருமான வரி அலுவலக எல்லையை "www.tnincometax.gov.in" என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி