தினமும் சுமார் 4 மணி நேரம் ஆபாசப் படங்களை பார்க்கும் மாணவர்கள்: ஆய்வக தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2015

தினமும் சுமார் 4 மணி நேரம் ஆபாசப் படங்களை பார்க்கும் மாணவர்கள்: ஆய்வக தகவல்.

மாணவர்களிடையே இன்றைய காலகட்டத்தில் போதைப் பழக்கம் போல் ஆபாசபடம் பார்க்கும் பழக்கமும் தொற்றிக் கொண்டு உள்ளது சுமார் 4 மணி நேரம் ஆபாச படங்களை தங்கள் செல்போன்மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் பார்ப்பதாக ஆயுவு மூலம் தெரியவந்துள்ளது.


இதுகுறித்து லண்டன் பல்கலைக் கழகத்தின் புள்ளியில் மற்றும் நீதிநெறித் துறை பேராசிரியரும், ரெக்ஸ்யூ அமைப்பின் நிர்வாகியுமான அபிஷேக் கிலிபோடு கோவையில் ஆய்வு ஒன்றை நடத்தினார் ஆய்வின் முடிவு குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது:- கோவையில் உள்ள 10 கல்லூரிகளில் இருந்து 400 மாணவர்களிடம் ஆபாச படம் பார்ப்பது குறித்த ஆய்வை கடந்த 4 வார காலமாக நடத்தினோம். இந்த ஆய்வில் 18 முதல் 21 வயது வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 71 சதவீத மாணவர்கள் வாரத்துக்கு சுமார் 4 மணி நேரம் ஆபாச படங்களை தங்கள் செல்போன்மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் பார்ப்பதாக தெரிவித்தனர். சுமார் 31 சதவீத மாணவர்கள் வாரத்துக்கு 17 முறை பலாத்கார காட்சிகளை பார்ப்பதும் தெரிய வந்துள்ளது.

வருடத்துக்கு புதிதாக 6,200 மாணவர்கள் பலாத்கார ஆபாச படங்களை இணைய தளம் வாயிலாக பார்க்கிறார்கள். இதன் மூலம் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட மாணவிகளை கடத்தும் சம்பவத்தில் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். மேலும் சில மாணவர்கள் விபசார அழகிகளை நாடும் அவலமும் உண்டாகி உள்ளது. ஆண்டுக்கு 2500 மாணவிகள் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.. இந்த சம்பவத்தை தடுக்க இணையதளத்தில் ஆபாச வலைதளங்களை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி