ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத 500 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2015

ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத 500 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நடவடிக்கை

ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத 500 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி,
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விச் செலவை (தனியார்பள்ளி கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்துள்ள கட்டணம்) சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினருக்கு அரசே நேரடியாக வழங்கிவிடும். தமிழகத்தில் உள்ள தனியார்பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஒரு லட்சத்து 17 ஆயிரம் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் நடப்பு கல்வி ஆண்டில் ஏறத்தாழ 61ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளில் இத்திட்டம் சரிவர அமல்படுத்தப்படுவதில்லை என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து மாநில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை ‘தி இந்து’விடம் நேற்று கூறியதாவது:இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதஇட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத தனியார் பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் சுமார் 500 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இது தொடர்பாக 15 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தினர் அளிக்கும் விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருப்பின், அவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு பிச்சை கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி