மாநில 'ரேங்க்' எடுத்த 988 மாணவர்களுக்கு பரிசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2015

மாநில 'ரேங்க்' எடுத்த 988 மாணவர்களுக்கு பரிசு

பொதுத் தேர்வுகளில், மாநில, 'ரேங்க்' எடுத்த, அரசு பள்ளி மாணவ, மாணவியர், 988 பேருக்கு, 1.68 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பில் மாநில அளவில், முதல் இடங்களைப் பிடித்த, 21 பேருக்கு, தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழும் கடந்த வாரம் வழங்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா பரிசுத் தொகையை வழங்கி பாராட்டினார்.
மீதமுள்ளவர்களுக்கு, பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில், 988 பேருக்கு, 1.68 கோடிரூபாய் பிரித்து வழங்கப்பட்டது.

தமிழை முதல் மொழிப்பாடமாக எடுத்து, பிளஸ் 2வில் மாநில அளவில், இரண்டாம் இடம் பெற்ற, 26 பேர்; மூன்றாம் இடம் பெற்ற, 23 பேர்; 10ம் வகுப்பில் மாநில முதலிடம் பெற்ற, 51 பேர்; இரண்டாம் இடம் பெற்ற, 194 பேர்; மூன்றாம் இடம் பெற்ற, 694 பேர், இந்தப் பரிசுத் தொகையை பெற்றனர்.அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி, சுப்பிரமணியன், வீரமணி மற்றும்அப்துல் ரஹீம் இதில் பங்கேற்று, தங்கள் துறை சார்ந்த மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர். துறை சார்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி