ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிபந்தனைகள்: கல்வித்துறை முடிவில் திடீர் மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2015

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிபந்தனைகள்: கல்வித்துறை முடிவில் திடீர் மாற்றம்

பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டம் எதிரொலியால் பொதுமாறுதல் கலந்தாய்வில் இந்தாண்டு சேர்க்கப்பட்ட புதிய நிபந்தனைகளை தளர்த்திக்கொள்ள கல்வித் துறை முடிவு செய்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்குவர்.


கடந்த இரண்டு ஆண்டுகளை போல் இந்தாண்டும் கலந்தாய்வுஅறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பும், போராட்டங்களும் நடத்தின.இந்நிலையில், இந்தாண்டிற்கான கலந்தாய்வு விதிமுறைகளை ஜூலை 14ல் கல்வித்துறை வெளியிட்டது. இதில், குறைந்தது ஒரு பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியோருக்கு மட்டுமே கலந்தாய்வு நடத்தப்படும்.

கலந்தாய்விற்கு முன் நிர்வாக அடிப்படையில் துறை, பள்ளிகள் மற்றும் மாணவர் நலன் கருதி முதலில் நிர்வாக மாறுதலை மேற்கொள்ளலாம் உட்பட சில நிபந்தனைகள் புதிதாக சேர்க்கப்பட்டன.இதனால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் புதிய நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என போராட்டங்கள் நடந்தன.இந்நிலையில் சென்னையில் அனைத்து மாவட்ட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டம் நேற்றுமுன் தினம் நடந்தது. செயலர் சபீதா, இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கலந்தாய்வில் பங்கேற்க 'ஒரே பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்' என்ற நிபந்தனையை தளர்த்த அதிகாரிகள் முடிவுசெய்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆசிரியர்கள் எதிர்க்கும் சில நிபந்தனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. முடிவில் 'மூன்று ஆண்டுகள்' என்பதை 'ஓராண்டு' என குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவு இரண்டு நாளில் வெளியாகும். ஜூலை 31 முதல் ஆக.7 வரை கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்களிடம் விண்ணப்பம் பெற வலியுறுத்தினர். ஆகஸ்டுக்குள் கலந்தாய்வை முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது என்றார்.-தினமலர்

14 comments:

  1. Hi Tnpsc Group 2 a CV second phase called 1500 .but phase 1 end of posting 750 .what the procedures followed

    ReplyDelete
  2. தினமலரா?????????......

    ReplyDelete
  3. இது தினமலரின் இந்த வார ஆசிரியர் பற்றியச் செய்தி.

    ReplyDelete
  4. Dear all,my wife is working as a pg asst economics at devakottai, sivagangai dist if anyone wants mutual transfer from Madurai, dindigul and virdgunagar pl contact 09585336532

    ReplyDelete
  5. Today Daily thanthi also have this news..

    ReplyDelete
  6. Anybody know about tn lab assistant case status...... when is result....... pls tell me....

    ReplyDelete
  7. Dear Teachers to know details about counseling pls see Jaya plus news at once.

    ReplyDelete
  8. B.T.english.....Mutual tranfr from MALEMARUVATHUR, KANGIPURAM DT......TO....salem.Namakkal...dharmapuri.....erode....pls CNTACT 8012998093

    ReplyDelete
  9. All teachers and headmasters of high & higher secondary schools should submit their counseling application form on or before 7th August in the CEO's office.
    All teachers and headmasters of elementary and middle schools should submit their counseling application form on or before 6th August in the DEEO's office

    ReplyDelete
  10. நிச்சயம் படிக்கவும்:
    படித்த படிப்பிற்க்கு வேலை கிடைக்கவில்லையா?கவலை வேண்டாம்.மாதசம்பளத்தை வாங்கி பிழைப்பை ஓட்டுபவர்களைக் காட்டிலும் இன்று சுயதொழில் தொடங்கி முதலாலி ஆனவர்கள்தான் அதிகம்.நீங்களும் அரசு வேலையையே நம்பியிராமல் சில சுய தொழில்களையும் செய்து வாழ்க்கையை வளமாக்க கற்றுக்கொள்ளுங்கள்..என்னால் இயன்ற சில டிப்ஸ்களை இங்கு www.gurugulam.com கமெண்ட்களில் தந்துள்ளேன்.உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.அனைத்து இடங்களிலும் copy paste செய்வது சற்று கடினமாக இருந்ததால் நீங்களே அங்கு சென்று பார்த்து பயன் பெறுங்கள்.அதற்காக நான் அந்த வெப்சைட் உறுப்பினர் என்று எண்ணி விட வேண்டாம்...நான் உங்களில் ஒருவள்.(ப்ரியா).

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  11. Hai I am working villupuram bt social science mutual trancer trichy madurai virudunagar any members

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி