தஞ்சைப் பெரிய கோவிலுக்கு, உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். அவர்கள் பயனடையும் வகையில், தற்போது, 'வை-பை' வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கருவிகள் கடந்த வியாழக் கிழமை பொருத்தப்பட்டன.
இதுதொடர்பாக, தஞ்சை பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் ராஜுகூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடியின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, தஞ்சைப் பெரிய கோவிலுக்கு, இலவச வை--பை வசதி செய்து தரப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்துடன் இணைந்து, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
கோவிலுக்குள் எந்த இடத்திலும், இந்த வை-பை வசதியை இலவசமாகப் பெறலாம். இதை, லேப்டாப் அல்லது மொபைல் போன்களிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.மொபைல் எண் மூலம், பி.எஸ்.என்.எல்.,லில் கணக்கைத் துவக்கிக் கொண்டு, நாள் ஒன்றுக்கு முதல் ௩௦ நிமிடம் இலவசமாக வை-பை வசதியைப் பெற்றிடலாம். இலவச சேவையைமாதத்திற்கு மூன்று முறை மட்டுமே, பயன்படுத்த முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி