ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கை நடுக்கத்தில் ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2015

ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கை நடுக்கத்தில் ஆசிரியர்கள்

பள்ளிகளில் செயல்முறை, படைப்பாற்றல் கல்விமுறையை பின்பற்றாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என தொடக்கக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 4 ம் வகுப்பு வரை செயல்வழி கல்விமுறைசெயல்படுத்தப்பட்டது.


இதில், அட்டைகள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அதேபோல் 5 ம் வகுப்பில் எளிமை படைப்பாற்றலும், 6 முதல் 8 ம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்விமுறையும் செயல்படுத்தப்பட்டது. இதில் மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணர்ந்து அதற்கு ஏற்ப கற்பிக்க வேண்டும்.'ஆசிரியர்களிடம் ஆர்வம் இல்லாததால் பெரும்பாலான பள்ளிகளில் செயல்வழி, படைப்பாற்றல் கல்விமுறையை பின்பற்றுவதில்லை' என அனைவருக்கும் கல்விஇயக்க அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.'இக்கல்வி முறையை பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்த கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் இணைந்து செயலாற்ற வேண்டும்.

அவற்றை பின்பற்றாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதனால் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆய்வுகள் அடிப்படையில் கல்வியாளர்கள் கொண்டு வந்த செயல்வழி, படைப்பாற்றல் முறையை செயல்படுத்த ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இதை முழுமையாக பின்பற்றாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம்' என்றார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி