வாட்ஸ் அப்-ல் விரைவில் லைக் பட்டன் வசதி அறிமுகம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2015

வாட்ஸ் அப்-ல் விரைவில் லைக் பட்டன் வசதி அறிமுகம்?

வாட்ஸ் அப் - ல் லைக் பட்டன் வசதி வழங்கப்பட உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. இன்றைய இளைய தலைமுறைகள் தங்களுக்குள் முக்கிய தகவல்கள், வீடியோக்கள், புகைப்படங்களை அனுப்ப அதிகம் பயன்படுத்துவது வாட்ஸ் அப்..
இதுவே இன்றைய இளைஞர்களின் தாரக மந்திரமாக கருதபடுகிறது. உலகம் முழுவதும் ஒரு மாதத்தில் 700 மில்லியன் மக்கள் வாட்ஸ் அப்பை தங்கள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் வாட்ஸ் அப் கணினியில் பயன்படுத்தக்கூடிய வசதியை வழங்கி உள்ளது. ஆனால், செல்போனில் உள்ள வசதிகள் அனைத்தும் கணினி பதிப்பில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. தற்போது வாட்ஸ் அப் தனது கணினி பதிப்பை மேம்படுத்தியுள்ளது. அதன் படி, ஸ்டேட்டஸ் மாற்றலாம், ஃப்ரப்பைல் படத்தை மாற்றியமைக்கலாம். அரட்டையை நீக்கலாம், ஆவணப்படுத்தலாம், குழுவை நிர்வகிக்கலாம்.

ஆனால் இந்த மேம்படுத்தல்கள் ஆண்டிராய்ட் பயனர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்டோஸ் பயனர்கள் இந்த அம்சங்களை பயன்படுத்த முடியாது. கூடுதல் தகவலாக, வாட்ஸ் அப்பில் பார்த்து படித்த செய்தியை படித்ததாக குறிக்கும் வகையில் வசதிகளை மேம்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேப்போல், லைக் பட்டன் வசதியையும் வழங்க உள்ளதாகவும் தகவல்தெரிவிக்கின்றது. இது தொடர்பாக, எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் அறிவிக்கவில்லை. எனினும், அதற்கான சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி