பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு? பல்கலைகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2015

பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு? பல்கலைகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை

'ஆராய்ச்சி படிப்புகளில், விதிகளை மீறி செயல்படக்கூடாது' என, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில்,
எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கு, வழிகாட்டி பேராசிரியரை நியமித்த பின், அவர் மூலமாகவே, மாணவர் ஆராய்ச்சி செய்து, ஆய்வறிக்கை சமர்ப்பித்து, பட்டம் பெற முடியும்.வழிகாட்டி நியமனம் குறித்து, யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:யு.ஜி.சி.,யின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு, வழிகாட்டி நியமனம் செய்வதில் முறைகேடுநிகழ்வதாக தகவல்கள் வந்துள்ளன.

சில பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள், தங்கள் நிறுவனங்களில்பணியாற்றாத பேராசிரியர்களை பகுதி நேரமாக வரவழைத்து, ஆராய்ச்சி மாணவர்களுக்கு அவர்களை வழிகாட்டியாக நியமித்து, பட்டம் வழங்குவதாக தெரிய வந்துள்ளது. இது, விதிகளை மீறும் செயல்.எந்தவொரு பல்கலையும், கல்லுாரியும், முழு நேர ஊழியராக நியமிக்காத பேராசிரியர் மூலம் பிஎச்.டி., அல்லது எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு நடத்த முடியாது. இதை மீறினால், சம்பந்தப்பட்ட பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. Good decision but who will amendments this rule very less .... Private is going only by profit but not service because government do not give aid..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி