'விடுமுறையும் கொடுக்காமல், பணியிலும் சேர்க்காதது தவறு' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2015

'விடுமுறையும் கொடுக்காமல், பணியிலும் சேர்க்காதது தவறு'

அனுமதியின்றி விடுமுறை எடுத்து, பி.எட்., பட்டம் பெற்ற பெண்ணை, சமையல்காரர் பணியில் சேர்க்க அனுமதிக்கும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடலூர் மாவட்டம், மேல்பூவனிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, மீராபாய் என்பவர் தாக்கல் செய்த மனு:
கடலூர் மாவட்டம், ஆலடியில், பிற்படுத்தப் பட்டமாணவியர் விடுதியில், உதவி மையல்காரராக, 1999ல் நியமிக்கப்பட்டேன். 2006ல், இளங்கலை பட்டம் பெற்றேன். மேற்கொண்டு படிப்பதற்கு விரும்பினேன்.விண்ணப்பித்தார்பி.எட்., படிப்பதற்கு, கடந்த ஆண்டு அக்டோபர்முதல், மே மாதம் வரை விடுமுறை அளிக்கக் கோரி, பிற்படுத்தப்பட்ட நலத் துறையின் கடலூர் மாவட்ட அதிகாரியிடம் விண்ணப்பித்தேன்.என்னை, இடமாற்றம் செய்தனர்; விடுமுறை கோரிய விண்ணப்பத்தையும் நிராகரித்தனர்.

'குரூப் - டி ஊழியர், படிப்புக்காக, விடுமுறை எடுக்க உரிமையில்லை' என, கூறப்பட்டது.'அனுமதியின்றி விடுமுறை எடுத்ததற்காக, ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது' என, விளக்கம் கோரி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. நேரில் ஆஜராகி, விளக்கம் அளித்தேன்.மிகப் பெரிய போராட்டத்திற்கு பின், பி.எட்., முடித்தேன். பணியில் சேர சென்ற போது, அனுமதிக்கவில்லை. பணியில் சேர, என்னை அனுமதிக்க வேண்டும். பணி பதிவேட்டில், பி.எட்., படிப்பை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

பணி நீக்கம் இல்லைமனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர், பணியில் இருந்து நீக்கப்படவில்லை; அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என, அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சமையல் பணி செய்பவர், மேல்படிப்புக்கு விருப்பம் தெரிவித்து, அதற்காக விடுமுறை கோரும்போது, அவருக்கு அனுமதி மறுத்திருக்கக் கூடாது. இவர்கள், மேற்படிப்பு படிக்க விரும்பும்போது, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.துறை சார்பில், மனுதாரரின் கோரிக்கையை, அரசுக்கு அனுப்பி, தேவையான உத்தரவைபெற்றிருக்க வேண்டும். 1999ல் இருந்து, சமையல்காரராக பணியாற்றி வருகிறார். அவர் பணியில் சேர, இரண்டு வாரங்களுக்குள் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி