இளங்கலை தமிழ் பட்டதாரிக்கு, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக, பதவி உயர்வு வழங்க மறுத்த, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.நிராகரிப்புஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கதிரிமலை பழங்குடியினர் நல தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியையாக புஷ்பராணி பணியாற்றுகிறார்; நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு அளிக்க கோரினார்.
இவரது மனுவை, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் நிராகரித்தார்.'தமிழில் இளங்கலை பட்டம் (பி.ஏ., தமிழ்) பெற்றுள்ளதால், நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியையாக பதவிஉயர்வு வழங்க இயலாது' என, காரணம் கூறப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், புஷ்பராணி மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்தநீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:
பள்ளி கல்வித்துறை, 2007 ஜூனில்பிறப்பித்த அரசாணையில், 'எந்த பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தாலும், அவர்களை பட்டதாரி ஆசிரியராகவோ, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவோ, பதவிஉயர்வுக்கு பரிசீலிக்கலாம்' என, கூறப்பட்டுள்ளது.
நான்கு வாரத்திற்குள்...
அரசாணை, மனுதாரருக்கு சாதகமாக உள்ளது. ஆனால், சரிவர பரிசீலனை செய்யாமல், இளங்கலை தமிழ் பட்டம் ஒரு தகுதியிழப்பாகக் கருதி, இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்; அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஆதிதிராவிடர்நலத்துறை இயக்குனர், புதிய உத்தரவை, நான்கு வாரங்களுக்குள் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி