கல்வித்துறை சிறப்பு அரசாணை ஆசிரியர் கலந்தாய்விற்கு முட்டுக்கட்டையா: ஆசிரியர்கள் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2015

கல்வித்துறை சிறப்பு அரசாணை ஆசிரியர் கலந்தாய்விற்கு முட்டுக்கட்டையா: ஆசிரியர்கள் அதிருப்தி

கல்வித்துறை செயலரின் சிறப்பு அரசாணையால் ஆசிரியருக்கான பொது பணி மாறுதல் கலந்தாய்வில் தாமதம் ஏற்படுகிறது என ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும்.
கோடை விடுமுறையில் நடத்தினால் மாறுதல் பெறுவோர் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தல், வீடு மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்ற நோக்கில் மே மாதத்தை பள்ளிக்கல்வித்துறை தேர்ந்தெடுத்தது.2015--16ம் கல்வியாண்டுக்கான பதவி உயர்வு, பணி மாறுதல் கலந்தாய்வு இதுவரை நடக்கவில்லை. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்து, கலந்தாய்வு நடக்கலாம் என, எதிர்பார்த்தவர்களின் நம்பிக்கை வீணானது.

தேர்தல் முடிந்தும் அதற்கான அறிகுறி ஏதுமில்லை..

ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது: கடந்த ஆண்டு அரையாண்டு தேர்வையொட்டி பள்ளிக்கல்வித்துறை செயலர் சிறப்பு அரசாணை ஒன்றை பிறப்பித்தார்.அதில்,அரையாண்டு தேர்வு நெருங்குவதால் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் எதுவும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டது. இதை ரத்து செய்தால் மட்டுமே பொது மாறுதலுக்கான கலந்தாய்வு விதிமுறை அரசாணை வெளியிட முடியும்.கல்வித்துறை செயலர் நினைத்தால் மட்டுமே இது முடியும் என்பதால், இது தொடர்பாக கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளோம்.அவருடன் பேசுவதற்கான வாய்ப்பு பெற முயற்சித்து வருகிறோம். காலாண்டு தேர்வு நெருங்குவதற்குள் பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். இல்லையெனில் மாறுதல் எதிர்பார்த்த பல ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும், என்றனர்.

16 comments:

  1. ஆணியே புடுங்க வேண்டாம்

    ReplyDelete
  2. does any one have the copy of the go staying transfer by Sabitha Mam

    ReplyDelete
  3. மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டில் இனிமேல் ஆசிரியர் இடமாற்றம் கிடையாது : பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு


    அரையாண்டு தேர்வு வந்துவிட்டதால் மாணவர்கள் நலன் கருதிபள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    அதில் மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டு வரை இனிமேல் ஆசிரியர்கள் மாறுதல் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த அரசாணை பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கும், தொடக்க கல்வி இயக்குனரகத்திற்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாணை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பப்பட உள்ளன.

    this was the post given in kalviseithi on Dec 12 2014... It says that the transferer was stopped only for the acamedic year... so the the go gets automatically cancelled after the academic year... therer is no need for reversing the order..

    ReplyDelete
  4. I have got the copy of the GO and sent it the the admin... Hope he will publish it soon...

    Let us put an end to the confusion and tell the higher officials to announce the counselling date soon... dont put the blame on the Secretary mam as her go is clear and it is only for the Academic year.... Thanks
    .

    ReplyDelete
  5. I have got the copy of the GO and sent it the the admin... Hope he will publish it soon...

    Let us put an end to the confusion and tell the higher officials to announce the counselling date soon... dont put the blame on the Secretary mam as her go is clear and it is only for the Academic year.... Thanks
    .

    ReplyDelete
  6. திகில் கதை
    மூன்று நண்பர்கள் 100 மாடிகள்
    கொண்ட ஒரு பில்டிங்கில் தங்கி
    இருந்தனர்.ஒரு நாள் லிப்ட் வேலை
    செய்யவில்லை.

    மூவரும் கதை சொல்லிக் கொண்ட
    மாடி ஏறி விடலாம் என் பிளான்
    செய்து கொண்டு ஏறினார்கள்.

    முதல் நபர் 50 ஆவது மாடி வரை
    ஒரு ACTION கதை சொல்லி கொண்டே
    வந்தார்.

    இரண்டாவது நபர் 99 ஆவது மாடி
    வரை ஒரு COMEDY கதை சொல்லி
    கொண்டே வந்தார்.

    மூன்றாவது நண்பர் மிகவும் திகிலான
    கதையை ஒரு வரியில் சொன்னார்.ரூம்
    சாவியை கார்லயே மறந்து விட்டு வந்துட்டேன்.

    ReplyDelete
  7. என் ப்ரெண்ட்டு கார்த்திக் புதுசா LED TV வாங்க போனான்...

    எனக்கு நிறைய விஷயம் தெரியும்னு நம்பி... என்னையும் கூட வர சொன்னான்...

    ( அவன் தலையெழுத்து அப்படி இருந்தா
    நாம என்ன பண்ண முடியும்..?!! )

    சரினு போனேன்...

    கடையில சாம்சங், சோனி ரெண்டு டி.வி பிடிச்சி இருந்தது... எதை வாங்கறதுனு ஒரே குழப்பம்...

    என்கிட்ட கேட்டான்..

    "சாம்சங் வாங்கிக்கோ..!! "

    " மச்சி... அதைவிட சோனி 4 ஆயிரம் ரூபா ஜாஸ்திடா.. அதையே வாங்கிக்கலாமே..!! "

    " பணத்தை வெச்சி எல்லாம் தரத்தை எடை போடதே... நீ கம்முன்னு சாம்சங்கே வாங்கு..!! "

    " இல்ல மச்சி... என்ன இருந்தாலும் சோனி ஜப்பான் கம்பெனி.. சாம்சங்.. கொரியா இல்ல..!! "

    " இன்னிக்கு டெக்னாலஜி எங்கையோ போயிடுச்சு... இப்ப போயி ஜப்பான், கொரியானு பேசிட்டு.... "

    "சரி.. முடிவா என்ன சொல்ற..?!!

    " முடிவா இல்ல... நான் ஆரம்பத்துல இருந்து ஒண்ணே தான் சொல்லிட்டு இருக்கேன்.. சாம்சங் எடு...!! "

    " ஓ.கே...!! நீ சொன்னா எதாவது விஷயம் இருக்கும்...!! அதையே வாங்கறேன்.. "

    33,000 ரூபாய்க்கு பில் போட்டு சாம்சங் டிவியை வாங்கி.... கார்ல வெச்சிட்டு இருக்கும்போது கார்த்திக் கேட்டான்.....


    " அது ஏன் மச்சி... இந்த டிவியே தான் வங்கணும்னு ஒற்றை கால்ல நின்னே..?!! "

    " ஹி., ஹி., ஹி., இந்த டி.வில தானே தமன்னா பாட்டு ஓடிச்சி....!!! "

    "அட... நாதாரி பயலே...."

    ReplyDelete
  8. Sir PG TRB Exam eppa sir?
    Plz replay me sir

    Manikumar sir
    Admin sir

    ReplyDelete
  9. The sources close to Education Dept says it may in the month of October.. should be confirmed with sources in TRB.. The teachers, students ratio is being calculated across the state .... may be after counselling.... they may announce the dates

    ReplyDelete
  10. I joined M.A. in 2007 and discontinued in 2008 and joined B.Ed.
    In 2009 i completed B.Ed and rejoined M.A.
    Then i completed M.A in 2010.
    I am working as a B.T. Assistant
    Is my qualification eligible for incentive.
    (B.Ed -2008-2009
    M.A.- 2007-2008 first year.
    2009-2010 second year.).

    ReplyDelete
  11. Not only Incentive Pg Promotion also affected and problem

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி