தமிழகத்தில் தமிழைப் படிக்காமலேயே பட்டம் பெறும் அவல நிலை: கருணாநிதி குற்றச்சாட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2015

தமிழகத்தில் தமிழைப் படிக்காமலேயே பட்டம் பெறும் அவல நிலை: கருணாநிதி குற்றச்சாட்டு

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை ஒரு பாடமொழியாக கற்பிக்கும் நடவடிக்கை, வெறும் ஏட்டளவில் மட்டுமே இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தமிழகத்தில் பல்கலைக்கழகம் வரை தமிழைப் படிக்காமலேயே பட்டம் பெறும் அவல நிலை நிலவுவதாக கூறியுள்ளார். தமிழை ஒரு பாடமாக்க திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டியுள்ள கருணாநிதி, அதிமுக ஆட்சியில் தமிழை ஒரு பாடமாக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் வெறும் அரசாணைகளாக, ஏட்டளவில் மட்டுமே இருப்பதாக குறை கூறியிருக்கிறார்.

கடந்த 2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அறிவியல் தமிழ்ப் பாடம் கற்பிக்கப்படும் என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழ், தற்போது, சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளில் வாரத்திற்கு அதிகபட்சம் 40 நிமிடங்கள் மட்டுமே கற்பிக்கப்படும் 3-வது மொழியாக்கப்பட்டிருப்பதாக கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி