ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க ஆசிய வங்கி நிதியுதவி: நிதின் கட்காரி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2015

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க ஆசிய வங்கி நிதியுதவி: நிதின் கட்காரி

தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு இணைப்புப் பாதை ஏற்படுத்தும் திட்டத்தை மத்தியஅரசு செயல்படுத்த உள்ளது.டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும்
கப்பல்த்துறை அமைச்சர் நிதின் கட்கரி இத்திட்டத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி 22 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கத் தயாராக உள்ளது என்றார்.

ராமேஸ்வரத்தின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு பாதை அமைப்பது மூலம் சார்க் நாடுகள் அனைத்தும் சாலை மார்க்கமாக இணைக்க வழி ஏற்படும் என்றார்.மேலும் , நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறையில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் இன்னும் 5ஆண்டுகளில் உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி