அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடை வழங்கப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2015

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடை வழங்கப்படுமா?

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு வகுப்புக்கான சீருடை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழகம் எங்கும் பள்ளிகளை அமைத்துக் கொடுத்தார் காமராஜர்.


மேலும், அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக ஏழைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தையும் அவர் கொண்டு வந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களும் பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தினர்.தற்போது பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், 4 ஜோடி சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மேலும், பிளஸ் 2 மாணவர்கள் மேல் கல்வி பயில வசதியாக மடிக்கணினி வழங்கப்படுகிறது. இவ்வாறாக மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது.இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் விளையாட்டு வகுப்பின்போது பள்ளிச் சீருடையிலேயே விளையாடும் நிலை உள்ளது. இதனால், வியர்வையில் நனைந்து மீண்டும் அதே சீருடையில் வகுப்புக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும்,சீருடையில் அழுக்கு படர்ந்து அதை துவைத்தாலும் சரிவரப் போகாத நிலை ஏற்படுகிறது. இந்தப் பள்ளிச் சீருடைகளும் ஓரிரு மாதங்களிலேயே வெளுத்து விடுகின்றன.

தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அனைத்து வகைக் கல்வி உபகரணங்களையும், மாணவிகளுக்கு சுடிதாரையும் பள்ளிச் சீருடையாக வழங்கி வரும் தமிழக அரசு, விளையாட்டு வகுப்புக்கென தனி உடை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். மாணவர்களுக்கு அரைக்கால் சட்டை, டி-சர்ட், மாணவிகளுக்கு டி-சர்ட், முழு கால்சட்டை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி