தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பிற்கு புது பாடத்திட்டம்... தாமதம்! 9 ஆண்டுகளாக பழைய புத்தகமே தொடரும் அவலம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2015

தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பிற்கு புது பாடத்திட்டம்... தாமதம்! 9 ஆண்டுகளாக பழைய புத்தகமே தொடரும் அவலம்

தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம் அமல்படுத்துவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒன்பது ஆண்டுகளாக, பழைய பாடப் புத்தகங்களே தொடரும் அவலம் காணப்படுகிறது.கடந்த, 2006ல், பிளஸ் 1 புதிய பாடத் திட்டமும், அடுத்த ஆண்டில், பிளஸ் 2 புதிய பாடத் திட்டமும் அமல்படுத்தப்பட்டன.


ஒன்பது ஆண்டுகள் முடியும் நிலையில், இன்னும், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தவில்லை.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டங்களைஅமல்படுத்த நடவடிக்கை எடுத்தது.அரசின் ஒப்புதலுக்கு...:இதற்காக நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு, வரைவு பாடத் திட்டங்களை தயாரித்து முடித்ததும், தமிழக அரசின் ஒப்புதலுக்கு, கல்வித் துறை, கோப்பை அனுப்பியது. பல மாதங்கள் ஆகின்றன; இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.

நடப்பு கல்வி ஆண்டில் (2014 - 15), பிளஸ் 1 புதிய பாடத் திட்டமும், அடுத்த ஆண்டு (2015 - 16), பிளஸ் 2 புதிய பாடத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என, முதலில் அறிவிக்கப்பட்டது.பணிகள் முடியாததால், அடுத்த கல்வி ஆண்டில் (2015 - 16), பிளஸ் 1 பாடத் திட்டமும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2016 - 17) பிளஸ் 2 பாடத்திட்டமும்அறிமுகப்படுத்தப்படும் என, பின்னர் அறிவிக்கப்பட்டது. வரைவு பாடத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பின், பாடங்களை எழுதுவதற்கான குழுக்களை ஏற்படுத்தி, பாடங்கள் எழுத வேண்டும். இதற்கு, ஒரு ஆண்டு முழுமையாக தேவைப்படும்என, கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

இது குறித்து, வரைவு பாடத் திட்டங்களை தயாரித்த ஆசிரியரில், ஒருவர் கூறியதாவது:பாடத் திட்ட தயாரிப்பு பணிகளை, மற்ற பணிகளைப் போல், வேகமாகச் செய்ய முடியாது. சிறிய தவறுகள் வந்தாலும், அது, மாணவர்கள் மத்தியில், தவறான கருத்துக்களை கற்பிப்பது போல் ஆகிவிடும்.வரைவு பாடத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், ஆறு மாதங்களுக்கு மேலாக இழுபறி உள்ளது. இதைப் பற்றி, முதல்வரிடம் எடுத்துக் கூற, அதிகாரிகள் தயங்குகின்றனர். முதல்வரிடம், விவரத்தை தெரிவித்தால், அவர், உடனடியாக ஒப்புதல்அளிப்பார்.நெருக்கடி கொடுத்தால்...:பாடத் திட்டங்களை எழுத, குறைந்தபட்சம், ஒருஆண்டு தேவைப்படும். எழுதி முடித்த பின், பிழைகள் பார்ப்பது உள்ளிட்ட, பல பணிகள் உள்ளன. எனவே, இனிமேல், தமிழக அரசு ஒப்புதல் அளித்தாலும், எங்களது பணியை,முழுமையாகச் செய்ய முடியாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி