செப். 15-ல் வரைவு வாக்காளர் பட்டியல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2015

செப். 15-ல் வரைவு வாக்காளர் பட்டியல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15-ம் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
பிஹாரில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இ-நேத்ரா திட்டம் குறித்த கூட்டம் டெல்லியில் நடந்தது.
<--more-->

இக்கூட்டத்தில் இ-நேத்ரா திட்டம் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா விளக்கம்அளித்தார்.இதுகுறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட இ-நேத்ரா திட்டம், அதில் உள்ள வசதிகள் குறித்து பிஹார் அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இ-நேத்ரா திட்டத்தில் உள்ள ஐ.பி.கேமரா, ஜிபிஎஸ் மூலம் கண்காணித்தல் போன்றவற்றை அவர்கள் பாராட்டினர்.

டெல்லியில் வரும் 10-ம் தேதி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் கூட்டம் நடக்கிறது. இதில் தமிழகம் சார்பில், இ-நேத்ரா திட்டம், கும்மிடிப்பூண்டியில் அறிமுகப் படுத்தப்பட்ட வாக்காளர் வசிப்பிடத் துக்கே சென்று பிரத்யேக ‘டேப்லட் கணினி’ மூலம் விவரங்களை சேகரித்தல், கணினி மூலம்17-ஏ படிவம் தயாரித்தல் போன்றவை முன்வைக்கப்படுகின்றன.தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்குகிறது. அப்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் படும். நாமக்கல், கும்பகோணத்தில் வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் குறித்தபுகார்களுக்கான விளக் கத்தை அந்தந்த மாவட்ட ஆட்சி யர்கள் அளித்துள்ளனர்.
பூந்த மல்லியில் 4 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டதாக வெளியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு, போலிகளை நீக்குதல் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்த உத்தேசித்துள்ளோம். அதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி