துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 17-இல் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2015

துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 17-இல் கலந்தாய்வு

துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்க உள்ளது.தமிழகத்தில் பி.எஸ்.சி. செவிலியர், இயன்முறை மருத்துவம் (பிஸியோதெரபி), பி.எஸ்.சி. ரேடியாலஜி, பி.எஸ்.சி. ரேடியோதெரபி டெக்னாலஜி, கார்டியோ பல்மனரி பெர்பூஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்தோமெட்ரி உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை 6 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்றது.


இந்தப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 480 இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 7,098 இடங்களும் என மொத்தம் 7,578 இடங்கள்உள்ளன. இந்தப் படிப்புகள் அனைத்தும் நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பாகும்.இந்தப் படிப்புகளில் சேருவதற்காக 20,940 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதிப் பட்டியல் தமிழக சுகாதாரத் துறையின்இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு சென்னையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தொடங்க உள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.முதல் நாளான திங்கள்கிழமை மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் 18-ஆம் தேதிமுதல் 27-ஆம் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.


கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் மாணவர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் www. tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களுக்குச் சென்று அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் "செயலர், தேர்வுக் குழு' என்ற பெயரில் ரூ. 200-க்கு வரைவோலையை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நாளில் கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி