பி.எட்., எம்.எட். படிப்பை 2 ஆண்டுகளாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் நவம்பர் 2-ம் தேதி இறுதிவாதம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2015

பி.எட்., எம்.எட். படிப்பை 2 ஆண்டுகளாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் நவம்பர் 2-ம் தேதி இறுதிவாதம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பி.எட்., எம்.எட் படிப்புகளை இரண்டு ஆண்டுகளாக மாற்று வதற்கு எதிரான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் நவம்பர் 2-ம் தேதி நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 670 பி.எட், எம்.எட் கல்வியியல் கல்லூரிகள் இயங்குகின்றன.


ஆசிரியர் கல்விக்கானதேசிய கவுன்சில் கடந்தாண்டு டிசம்பர் 1-ம் தேதி கொண்டு வந்த புதிய விதிமுறைகளின்படி, பி.எட் மற்றும் எம்.எட். படிப்பு ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக மாறும் என்றும், 100 மாணவர்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக இனிமேல் 50 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. அத்துடன், பி.எட். எம்.எட் படிப்புகளுடன் கலை மற்றும் அறிவியல் படிப்புகளையும் கல்வியியல் கல்லூரிகள் நடத்த வேண்டும். இப்புதிய விதிமுறையை 21 நாட்களில் அமல்படுத்துவோம் என்று கல்வியியல் கல்லூரிகள் உத்தரவாதம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. புதிய விதிமுறைகளை அமல்படுத்தாத கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எதிர்காலத்தில் புதிதாக அங்கீகாரம் அளிக்கப்படாது என்றும் எச்சரிக்கப்பட்டது.

இப்புதிய விதிமுறைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்வியியல் கல்லூரிகள் வழக்கு தொடர்ந்தன. தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல்அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக உயர்கல்வித் துறை செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் நவம்பர் 2-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

4 comments:

  1. What about Government B.Ed college Admission

    ReplyDelete
  2. B.ed counseling எப்பொழுது

    ReplyDelete
  3. B.ed counseling எப்பொழுது

    ReplyDelete
  4. Which date give b.ed admission form in government college. ..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி