ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 29 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2015

ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 29 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் தகவல்

ஆகஸ்ட் 24-ம் தொடங்கி செப்டம்பர் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.மானியக் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை வரும் 24-ம் தேதி கூடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது போன்ற அலுவல்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.பின்னர் இதுகுறித்து சபாநாயகர் ப.தனபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 29 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.முதல் நாளன்று முன்னள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் மறைவுக்கு முதல் நாள் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்படும்.இரங்கல் தெரிவிக்கப்படும் நாளையும் சேர்த்து மொத்தம் 19 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் செயல்படும்'' என்றார்.


எதிர்க்கட்சிகள் கோரிக்கை:


கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது நடந்த அமளி காரணமாக, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் தவிர தேமுதிக எம்எல்ஏக்கள் அனைவரும் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் நீக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். இதனால், இந்தக் கூட்டத்திலும் அவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தேமுதிக உறுப்பினர்களை இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.அதேபோல், முக்கிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 2 நாட்களுக்கு நடைபெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மதுவிலக்குப் பிரச்சினை:


தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கோரி போராட்டங்கள் நடந்தது குறித்து பேரவையில் பேச திமுக உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளன. மேலும், குடிநீர் தட்டுப்பாடு, சூரியஒளி மின் கொள்முதல், மேகேதாட்டு அணை விவகாரம்உள்ளிட்ட பிரச்சினைகளும் எழுப்பப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி