30 ஆயிரம் பேர் எழுதிய 'சிவில் சர்வீசஸ்' தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2015

30 ஆயிரம் பேர் எழுதிய 'சிவில் சர்வீசஸ்' தேர்வு

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 துறை பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வை, தமிழகத்தில், 30 ஆயிரம் பேர் எழுதினர்.சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு,நேற்று நாடு முழுவதும், 71 நகரங்களில், 2,000 மையங்களில் நடந்தது; 9.45 லட்சம் பேர்தேர்வெழுதினர்.


தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் வேலுாரில்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன; இதில், 30 ஆயிரம் பேர், காலையிலும், பிற்பகலிலும் நடந்த தேர்வில் பங்கேற்றனர். அதேபோல், புதுவையில் அமைக்கப்பட்ட மையங்களில், 3,300 பேர் பங்கேற்றனர்.காலையில் இரண்டு மணி நேரம், முதல் தாளும், பிற்பகலில் இரண்டாம் தாளுக்கும் தேர்வு நடந்தது.இரண்டாம் தாளில், கட்டாயம், 33 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, அடுத்தகட்ட மெயின் தேர்வு எழுத முடியும் என்ற நிபந்தனையுடன், ஆங்கிலம் மற்றும் இந்தியில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.தற்கால அரசியல் மற்றும் முக்கிய நிகழ்வுகள், இந்திய வரலாறு, உலக புவி அமைப்பு, சமூக, பொருளாதார ரீதியிலான இந்திய மற்றும் உலக வரலாறு, சமூகவியல் திட்டங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் பொது அறிவியல் குறித்தகேள்விகள் முதல்தாளில் இடம்பெற்றன. இரண்டாம் தாளில், சர்வதேச மொழித்திறன், பகுப்பாய்வுத் திறன், பிரச்னைகளை தீர்க்கும் திறன், முடிவு எடுக்கும் திறன், பொது அறிவுத்திறன், 10ம் வகுப்பு அடிப்படையிலான பொது கணிதத்திறன் குறித்த வினாக்கள் இடம் பெற்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி