'TET' 5 சதவீத மதிப்பெண் தளர்வு பிரச்னை : ஆக.18ல் இறுதி விசாரணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2015

'TET' 5 சதவீத மதிப்பெண் தளர்வு பிரச்னை : ஆக.18ல் இறுதி விசாரணை

ஆசிரியர் நியமனத்துக்கான 'டெட்' தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளித்த அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்ததை எதிர்த்து ஓராண்டுக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது.ஆசிரியர் பணி நியமனத்துக்கான டெட் தேர்வு 2013 ஆகஸ்டில் நடந்தது; 4.5 லட்சம் பேர் எழுதினர்.


இதில் தேர்ச்சி பெற மொத்த மதிப்பெண்ணான 150க்கு 60 சதவீதமான 90 மதிப்பெண் பெற வேண்டும். அதன்படி 16 ஆயிரத்து 492 பேர் 90 மதிப்பெண் பெற்றனர்.அரசு பள்ளிகளில் 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் இடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. இந்த நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டது.

இந்நிலையில் டெட் தேர்வு எழுதியவர்களில் முன்னேறிய வகுப்பினர் தவிர மற்ற பிரிவினருக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத தளர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.அரசின் புதிய உத்தரவால் 60 சதவீதத்திற்கு கீழ் குறைந்த மதிப்பெண் பெற்ற 27 ஆயிரம் பேர் சான்றிதழ் சரி பார்ப்புக்கு தகுதி பெற்றனர். இதனால் 60 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மதிப்பெண் தளர்வை எதிர்த்து 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள்சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் மதிப்பெண் தளர்வு வழங்கிய அரசாணையை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இன்னொரு வழக்கில்ஆசிரியர் நியமன நடவடிக்கையை தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற லாவண்யா என்ற பட்டதாரி உட்பட 17 பேர் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் 'வெயிட்டேஜ்' என்ற கூடுதல் தர மதிப்பீட்டை ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். அவை அனைத்தும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்பட்டன.கடைசியாக இந்த மனுக்கள் கடந்த மாதம் 21ம் தேதி விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டது.இதன்படி தமிழக அரசு நேற்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. மனுவில் '5 சதவீத மதிப்பெண் தளர்வு முறை இடஒதுக்கீட்டின் படி வழங்கப்பட்டது. அதை நீக்கி மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த மனு வரும் 18ம்தேதி இறுதி விசாரணைக்கு வருகிறது.கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர் நீதிமன்றமதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

46 comments:

  1. என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை.
    துருபிடிச்ச ஆட்சிஎன்று

    சொல்லுகிறார்களேஅது இதுதானோ

    ReplyDelete
  2. http://www.maalaimalar.com/2015/08/08085541/Employment-eligibility-Author.html

    ReplyDelete
  3. புதுடெல்லி, ஆக.8-

    தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25-ல், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் அனைத்து வகையான இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசாணை 71-ல் ‘வெயிட்டேஜ்‘ முறையும் பணி நியமனத்தின் போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மதிப்பெண் விலக்கை எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும் போது இப்படி அனைவருக்கும் வழங்குவது சரி இல்லை என்றும், ‘வெயிட்டேஜ்‘ முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு இருக்கும் என்றும். சென்னை ஐகோர்ட்டிலும். மதுரை கிளையிலும் சிலரால் வழக்குகள் தொடரப்பட்டன.

    ReplyDelete
  4. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு தரப்பில் நடத்தப்படும் அனைத்து வகையான தேர்வுகளிலும் இதே போன்ற மதிப்பெண் விலக்குகள் மற்றும் இட ஒதுக்கீடு முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் இந்த முறை பின்பற்றப்படாத நிலை இருந்தபோது, தேர்வு எழுதக்கூடிய பல்வேறு இட ஒதுக்கீட்டு பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் ஏதேனும் ஒருவகையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து தமிழக அரசு சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி பிறகு அரசாணையாக வெளியிட்டது. அனைத்து பிரிவினருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டுதான் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எனவே மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு இந்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    ReplyDelete
  5. அறிவு இல்லாதவர்கள் தான் இது போன்ற முட்டாள்தனமான பேச்சு மற்றும் வழக்கு

    ReplyDelete
  6. TET CASE final hearing is on
    25/08/2015. Check the date admin

    ReplyDelete
    Replies
    1. எப்படி பார்பது?

      Delete
    2. Special Leave Petition (Civil) 29245 OF 2014
      V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

      Listed on : 25/08/2015

      Delete
    3. UPON hearing the counsel the Court made the following

      O R D E R

      There appears to be a conflict between the decisions

      rendered by the Principal Bench and Madurai Bench of

      the Madras High Court.

      With regard to the decision rendered by the Madurai

      Bench, it is stated by learned counsel appearing for

      the State that a review petition was filed but that was

      withdrawn with liberty to file a special leave petition

      against the decision of the Madurai Bench.

      Learned counsel for the State says that the special

      leave petition is likely to be filed within a week.

      Under the circumstances, we do not feel the necessity

      of going ahead with this case at the present moment but

      would like to wait for the special leave petition to be

      filed against the decision of the Madurai Bench so that

      if there is difference of opinion between the decisions

      rendered by the Principal Bench and the Madurai Bench

      that can be resolved.

      Under the circumstances, the matters are adjourned

      for two weeks.

      Delete
    4. Enna sir epdi thalli vachutea erukanga

      Delete
    5. Enna sir epdi thalli vachutea erukanga

      Delete
  7. Cv2010 today hearing a Gaja sir

    ReplyDelete
  8. Cv2010 case today hearing a sir

    ReplyDelete
  9. Intha naadum nattu makkalum nasamai pogattum nu apavey sonnaanga... Ipo sariya pochu... Idiots nga ethachum oru mudivukku vangaada.. One yr seraikra velaika pochu intha government epdilam dagaaltti vela katranunga... Evlo naal than kanavulaaye vaalrathu..

    ReplyDelete
  10. Korangu Kaila poo maala.. Ivanunga Kaila government.. Parliament election kaga mark ah reduce pannenga.. State election kaga cancel pannuma ?????.. Kadaisi nambikkaill kanavugalodu kathirukkum (supreme court judgement), ungalai pol oruvan..

    ReplyDelete
  11. Intha naadum nattu makkalum nasamai pogattum nu apavey sonnaanga... Ipo sariya pochu... Idiots nga ethachum oru mudivukku vangaada.. One yr seraikra velaika pochu intha government epdilam dagaaltti vela katranunga... Evlo naal than kanavulaaye vaalrathu..

    ReplyDelete
  12. Intha naadum nattu makkalum nasamai pogattum nu apavey sonnaanga... Ipo sariya pochu... Idiots nga ethachum oru mudivukku vangaada.. One yr seraikra velaika pochu intha government epdilam dagaaltti vela katranunga... Evlo naal than kanavulaaye vaalrathu..

    ReplyDelete
  13. When is final judgement sir if somebody knows please publish..

    ReplyDelete
  14. Nan palayapadi madu meikave poirulamnu irukken sir..athukkum ippa Malai illa

    ReplyDelete
  15. Governent.waste

    Neengalam.nalla irupinga da

    ReplyDelete
  16. 5% மதிப்பெண் தளர்வு குறித்த மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்கனவே ஒரு அப்பில் மனுவை ஒருவர் தொடுத்தார் அது 12.1.15 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது

    ' ITEM NO.16 COURT NO.8 SECTION XII

    S U P R E M E C O U R T O F I N D I A
    RECORD OF PROCEEDINGS

    Petition for Special Leave to Appeal (C)......../2015
    CC No. 21383/2014
    (Arising out of impugned final judgment and order dated 25/09/2014
    in WP No. 4558/2014 passed by the High Court of Judicature at
    Madras Bench at Madurai)

    C SUBRAMANIAN AND ORS. Petitioner(s)

    VERSUS

    UNION OF INDIA AND ORS. Respondent(s)

    (With application for permission to file SLP and interim relief
    and office report)


    Date : 06/01/2015 This petition was called on for hearing today.

    CORAM :
    HON'BLE MR. JUSTICE FAKKIR MOHAMED IBRAHIM KALIFULLA
    HON'BLE MR. JUSTICE ABHAY MANOHAR SAPRE

    For Petitioner(s)
    Mr. Anandh Kannan N., A.O.R.


    For Respondent(s)

    UPON hearing counsel the Court made the following
    O R D E R


    Permission to file the Special Leave Petition

    is dismissed as withdrawn.




    [KALYANI GUPTA] [SHARDA KAPOOR]
    COURT MASTER COURT MASTER
    Signature Not Verified

    Digitally signed by
    Kalyani Gupta
    Date: 2015.01.12
    14:33:22 IST
    Reason:

    ReplyDelete
    Replies
    1. அப்போ அரசு மனுவும் தள்ளுபடி ஆகுமா?

      Delete
    2. indha case madurai court theerpukku edhiraga podapattada ,appadiyendral arasumalmuraiyidu manuvum cancel aguma please vilakki kurungal sir,adminsir also

      Delete
    3. அரசின் மனு தள்ளுபடி செய்யவில்லை அவை ஏற்கப்பட்டுவிட்டது இவை பான்டிச்சேரி யூனியனை சேர்ந்தவர் தொடுத்திருக்கலாம் ஏன் என்றால் வழக்கில் யூனியன் ஆப் இந்தியா என்று உள்ளது அதாவது அந்த நேரத்தில் பான்டிச்சேரி யூனியன் நமது தமிழகத்தை ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்றியதால் அந்த மாநிலமும் மதுரையில் 5% ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் தடை செய்திருக்கலாம் இதை எதிர்த்து 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்றவர் வழக்கு தொடுத்திருக்கலாம் அப்பில் செய்ய தமிழக அரசுக்கு மட்டும் உரிமை உள்ளதால் இவரது மனுவை தள்ளுபடி செய்திருக்கலாம் இறுதியாக 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற அரசு முனைப்புடன் இருக்கிறாகள் இதன் மூலம் 27 ஆயிரம் பேர் ஆதரவு அரசுக்கு கிடைக்கும் என்பதால் அரசு வெற்றி பெற போதிய ஆதரங்களை தாக்கல் செய்யலாம் யாருக்கும் பாதிப்பில்லாமல் நல்லது நடக்க ஆண்டவனை வேண்டுவோம்

      Delete
  17. Argument mudinchathane final. Argument start akala piragu epdi

    ReplyDelete
  18. FINAL JUDJMENT
    Sep 2014 to SEP 2017
    CASE TRAVEL MAX 3 YEARS

    ReplyDelete
  19. Already three final hearing fnished this is also final hearing what sir

    ReplyDelete
  20. super.chance,to.get,83-89mark.get,job,

    ReplyDelete
  21. waste government ....waste case......

    ReplyDelete
  22. I GOT 95 MARKS IN TN TET BUT DUE TO WEIGHT AGE I CANT GET JOB.....WHAT CAN I DO?

    I AM VERY SAD PAST 1 YAER.....ANY NEWS PLS UPDATE ME....

    98653 82450

    ReplyDelete
  23. I got 95 tet paper 2
    Employment office la register pannanuma?

    ReplyDelete
    Replies
    1. Not compulsory. They didn't ask employment seniority in last TET.

      Delete
  24. Enna amma epudi panrigalema.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி