503 மேல்நிலை எழுத்தர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2015

503 மேல்நிலை எழுத்தர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு

புதுவையில் 503 மேல்நிலை எழுத்தர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.புதுவையில் 5 ஆண்டு வசித்த இந்திய குடியுரிமை பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


பொது பிரிவில் 253, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 90, தாழ்த்தப்பட்டோருக்கு 80 இடங்கள் உட்பட மொத்தம் 503 மேல்நிலை எழுத்தர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 11-9-2015-ம் தேதியில் 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கு வயது தளர்வு உண்டு.


2 மணிநேரம் நடைபெறும் எழுத்துத்தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்படும்.கணிதம். பொது அறிவியல், ஆங்கிலம், வரலாறு, புவியியல், பொருளாதாரம், இந்திய வரலாறு, பொது அறிவு, தற்போதைய நடப்பு ஆகிய பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். தவறான பதில்களுக்கு 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இந்த எழுத்துத்தேர்வுக்கான நாள், இடம், நேரம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்.தகுதிவாய்ந்தவர்கள் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.செப்டம்பர் 11-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் பற்றி இணையதளத்தில் வெளியிடப்படும். எழுத்துத்தேர்வுக்கு பின் தேர்வானவர்கள் பட்டியல்வெளியிடப்படும்.


விண்ணப்பிக்கும் முறை பற்றி தெரிந்துகொள்ள இணையதளத்திலும், 0413-2233215 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நாட்களில் காலை 9.30 முதல் மாலை 5 மணிக்குள்ளும் விபரங்களை தெரிந்துகொள்ளலாம். இத்தகவலை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி