இந்தியாவில் 6 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் தேவை: ஐசிஏஐ தென் மண்டல தலைவர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2015

இந்தியாவில் 6 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் தேவை: ஐசிஏஐ தென் மண்டல தலைவர் தகவல்

இந்தியாவில் 6 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் தற்போது தேவைப்படுகிறார்கள் என்று இந்திய பட்டயக் கணக்காளர் கல்வி நிறுவனத்தின் (ஐசிஏஐ) தென் மண்டல தலைவர் பி.ஆர்.அருளொளி கூறினார்.பி.ஆர்.அருளொளி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:


ஐசிஏஐ தென் இந்திய மண்டல கவுன்சில் சார்பில் 47-வது தென்னிந் திய பட்டயக் கணக்காளர்கள் மாநாடு மகாபலிபுரத்தில் வரும் 22 மற்றும் 23-ம் தேதிகளில் நடக்க வுள்ளது. சி.ஏ. படிப்பை பிரபலப் படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

10 முதல் 15 ஆயிரம் வரை மாணவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். அவர்களுக்கு சி.ஏ. படிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.மாநாட்டையொட்டி 66 கி.மீ. தூரம் கொண்ட பதாகையை மகாபலிபுரம் கூட்டு ரோடு முதல் அந்த ஊரில் உள்ள செங்கல்பட்டு சாலை வரை வைக்கவுள்ளோம். இதற்காக 10 ஏக்கர் நிலப்பரப்பை தேர்வு செய்துள்ளோம். இன்றைக்கு பட்டயக் கணக்காளர்களுக்கு மிகப்பெரிய தேவை உள்ளது. இந்தியாவில் தற்போது 2.5 லட்சம் பட்டயக் கணக்காளர்கள்உள்ளனர். ஆனால் தேவையோ 6 லட்சமாக உள்ளது.2019-ல் 6 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் இருப்பார்கள்.

சி.ஏ. படிக்க மூன்றரை ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் செலவாகும். ஆனால் அந்த தொகையை முதல் மாதமே ஊதியமாக பெறலாம். இது குறித்த விழிப்புணர்வு மாநாட் டில் ஏற்படுத்தப்படும். ஒருவர் சி.ஏ. முடித்தால், சென்னை பல்கலைக் கழகம் உட்பட இந்தியாவில் உள்ள 96 பல்கலைக்கழகங்களில் நேரடி யாக பிஎச்.டி. படிக்கலாம்.இந்தியாவில் தற்போது 2.5 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் உள்ளனர். ஆனால் தேவையோ 6 லட்சமாக உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி