அடுத்த மாதத்தில் 7,000 நர்ஸ்கள் பணி நியமனம் ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2015

அடுத்த மாதத்தில் 7,000 நர்ஸ்கள் பணி நியமனம் ஆணை

'தேவை கருதி, அரசு மருத்துவமனைகளுக்கு, புதிதாக, 7,243 பேர், தொகுப்பூதிய அடிப்படையில் நர்ஸ் பணியில் சேர்க்கப்படுவர்' என, அரசு தெரிவித்தது. இதற்கான தகுதித்தேர்வு, ஜூனில் நடந்தது. இதில்,


தேர்வு செய்யப்பட்டோருக்கு, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., சான்றிதழ் சரி பார்ப்பு பணியை, கடந்த வாரம் முடித்தது.'டாக்டர் தேர்வு முடிந்து, 10 மாதங்களாகியும் பலருக்கு இன்னும் வேலை தரப்படவில்லை. அதுபோன்று, நர்ஸ் பணிக்கும் இழுத்தடிக்காமல், உடனடியாக நியமனம் செய்ய வேண்டும்' என, தேர்வு செய்யப்பட்டுள்ள, நர்ஸ்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எம்.ஆர்.பி., தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பை முடித்துள்ளது. தேர்வானோர் இறுதி பட்டியலை தயாரித்து வருகிறது. இந்த பட்டியல் எங்களுக்கு கிடைத்ததும், கலந்தாய்வு நடத்தி, பணி நியமன ஆணை வழங்கப்படும். அடுத்த மாதத்தில் பணி ஆணை தர வாய்ப்புள்ளது' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி