மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத் தொகை, நடப்பு நிதியாண்டில்ரூ.1 லட்சம் கோடியை தாண்டும். அத்து டன், 7-வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் போது இந்த செலவினம் மேலும் அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப் படுகிறது. இதனால் நிதி நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத் தொகை 9.56 சதவீதம் அதி கரித்து ரூ.1 லட்சத்து 619 கோடி யாக அதிகரிக்கும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.வரும் 2016-17-ம் ஆண்டு 7-வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தினால், 15.79 சதவீத அளவுக்கு (ரூ.1.16 லட்சம் கோடி) இந்தத் தொகை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இத் தொகை 2017-2018-ம் ஆண்டில் ரூ.1.28 லட்சம் கோடியாக உயரும்.அதேபோல் ஓய்வூதியதாரர் களுக்கு வழங்கப்படும் தொகை யும் நடப்பு நிதியாண்டில் ரூ. 88,521 கோடியாக உயரும். வரும் 2016-17-ம்ஆண்டில் ரூ.1.02 லட்சம் கோடியாகவும் 2017-18-ம் ஆண்டில் ரூ.1.12 லட்சம் கோடியாகவும் ஓய்வூதியம் வழங்க வேண்டி இருக்கும். இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.7-வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
This comment has been removed by the author.
ReplyDelete