அக்டோபர் 8-இல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2015

அக்டோபர் 8-இல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்.

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் அக்டோபர் 8-இல் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகிறது.


இந்த நிலையில்,அடுத்தகட்டப் போராட்டம் குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் இந்தக் குழுவின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.அடுத்தகட்டமாக, வரும் அக்டோபர் 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக, அந்தக் குழுவின் மாநிலத் தொடர்பாளரும், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவருமான இளங்கோவன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி