ஆசிரியர்கள், மாணவர்கள் என யார் போராட்டம் நடத்தினாலும் தமிழக அரசு கண்டுகொள்வதில்லை என்று சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
உண்ணாவிரதம்
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், தமிழ் வழிக்கல்வியை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது.உண்ணாவிரதத்துக்கு ஜாக்டோவின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் தலைமை தாங்கினர். பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நிச்சயம் கிடைக்கும்ஆசிரியர்கள், மாணவர்கள், சத்துணவு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தினாலும் தமிழக அரசு கண்டுகொள்வதில்லை. ஆகவே இந்த போராட்டத்தை கண்டு அஞ்சியாவது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த காலங்களில் ஆசிரியர்களுக்கும், கல்வி துறைக்கும் ஏராளமானவை செய்திருக்கிறார். 2005-06 அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கல்வித்துறைக்கு ரூ.4,348 கோடியே ஒரு லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2010-11 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ரூ.10,147 கோடியே 56 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதேபோன்று 2001-06 அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 45,987 ஆசிரியர்கள் தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு 2006 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 3 மடங்கு சம்பளம் உயர்த்தி காலமுறை ஊதியமாக வழங்கியவர் கருணாநிதி. சமச்சீர் கல்வி, உயர் கல்விக்கென தனி அமைச்சகம் என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர் கருணாநிதி. உங்கள் (ஆசிரியர்கள்) மூலமாக மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. தலைமையிலான ஆட்சி வந்தால் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நிச்சயம் மாற்றம் கிடைக்கும்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதனைத்தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
மாற்றத்தை கொண்டுவரமுடியும்
மாற்றத்தை விரும்புபவர்கள் ஆசிரியர்கள், அதே சமயத்தில் மாற்றத்தினை உருவாக்குபவர்களும் ஆசிரியர்கள்தான். அவர்கள் நினைத்தால் சமூக, கல்வி மற்றும் ஆட்சி மாற்றத்தையும் உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள்.ஆசிரியர்கள் நினைத்தால் மாற்றத்தை கொண்டுவரமுடியும். எங்களுக்கு ஆசிரியர்கள்தான் முக்கியம். நிறைவேற்றப்படவேண்டிய அவர்களுடைய கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றி காண்பிப்போம். ஆசிரியர்களின் போராட்டத்துக்கு எங்களுடைய முழு ஆதரவு உண்டு.இவ்வாறு அவர் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசும்போது,அரசு பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக தமிழ் வழிக்கல்வியில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசுக்கு போராட்ட மொழி மட்டும் புரிகிறது. ஆகவே அந்த வழியிலேயே நாம் போராடவேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆசிரியர்களோடு இணைந்து அவர்களின் கோரிக்கைக்காக போராடும்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் பேசும்போது, “ஆசிரியர்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் தங்கள் கோரிக்கைகளுக்காக ஒன்றாக இணைந்து தொடர்ந்து போராடவேண்டும்” என்றார்.
தொல்.திருமாவளவன்
இதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், த.மா.கா பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். உண்ணாவிரதத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி