இந்த ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வானவர்களுக்கு டெல்லியில் பயிற்சி: மத்திய மந்திரி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2015

இந்த ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வானவர்களுக்கு டெல்லியில் பயிற்சி: மத்திய மந்திரி தகவல்

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுபவர்கள் தாங்கள் பணி புரிய விரும்பும் மாநிலங்களில் பயிற்சி பெறுவதும், அதன்பிறகு அவர்கள் பணியில் அமர்த்தப்படுவதும் வழக்கமான நடைமுறையாக உள்ளது.


இந்த ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வானவர்களுக்கு தேசிய தலைநகர் டெல்லியில் பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய பணியாளர் நல ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.2014-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற இரா சிங்கால், நிதி குப்தா, வந்தனா ராவ் ஆகியோருக்கு டெல்லியில் பாராட்டு விழா நடந்தது.


இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியபோது ஜிதேந்திர சிங் இத்தகவலை வெளியிட்டார்.இது குறித்து அவர் கூறுகையில், “ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகளின் திறனை மெருகேற்றும் வகையில் அவர்களுக்கு மத்திய அரசு 3 மாத கால பயிற்சியை அளிக்கும். தங்களுடைய கடமைகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கும், மத்திய அரசின் அலுவல்களை அவர்கள் முழுமையாக அறிந்து கொள்வதற்கும் இந்த பயிற்சி ஒரு வாய்ப்பாக அமையும்" என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி