போட்டியில் ஜெயித்தால் ஜப்பானில் படிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2015

போட்டியில் ஜெயித்தால் ஜப்பானில் படிக்கலாம்!

'பெட்ரோலிய எரிபொருள் சேமிப்பு குறித்து, சிறந்த ஓவியம் வரையும் மற்றும் கட்டுரை எழுதும் மாணவர், ஜப்பான் நாட்டில் மேற்படிப்பு படிக்க, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்' என, பெட்ரோலியத்துறை அறிவித்துள்ளது.பெட்ரோலிய எரிபொருளை சேமிப்பது குறித்து, மாநில மற்றும் தேசிய அளவில், ஓவியப் போட்டியை, பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு நடத்துகிறது.


இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். இதற்கான விவரங்கள், கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட, 23 மொழிகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளை அந்தந்த பள்ளிகளே நடத்த வேண்டும். அதன் முடிவுகளை பெட்ரோலிய எரிபொருள் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும். ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறும் தலா, ஒரு மாணவருக்கு, முதல் பரிசாக, 30 ஆயிரம் ரூபாய், ஒரு லேப்டாப் பரிசு வழங்கப்படும். மேலும், அந்த மாணவர்கள் ஜப்பான் நாட்டில் மேற்கல்வி கற்க அனைத்து வசதியும் செய்து தரப்படும். இரண்டாம் பரிசாக, 20 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் பரிசாக, 12,500 ரூபாய் வழங்கப்படும். இதற்கான விவரங்களை, www.pcra.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி