மக்கள் கருத்தை அறிய செல்போன் செயலி: ஸ்டாலின் தொடங்கினார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2015

மக்கள் கருத்தை அறிய செல்போன் செயலி: ஸ்டாலின் தொடங்கினார்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகனூல் பதிவில் கூறியிருப்பதாவது:மக்களோடு என்றும் தொடர்பில் இருக்கும் நோக்கத்தில் M.K.Stalin என்ற செல்போன் செயலி சேவையை நான் தொடங்குகிறேன். இது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வின்டோஸ் ஆகிய இயங்கு தளங்களில் செயல்படும்.


இதன் மூலம் பொதுமக்கள், அவர்களது தொகுதியிலும், மாநில அளவிலும் உள்ள பிரச்சினைகளை எனது கவனத்துக்கு கொண்டு வரலாம். இந்த செயலியில் வரும் அறிவிப்பு கள் மூலம் எனது உரைகள், அண்மை செய்திகள், கருத்துகள் மற்றும் என்னுடைய பத்திரிகை குறிப்புகள் போன்றவற்றை பொது மக்கள் தெரிந்துகொள்ள முடியும்.கொளத்தூர் தொகுதி மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை தெரிவிக்கவும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியை செலவு செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கவும்இந்த செயலியில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் தீர்வு காணப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் அறிந்துகொள்ள முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி