பலனளிக்காத கம்ப்யூட்டர் வசதிகள்:தனியார் இன்டர்நெட் மையங்களில் ஆசிரியர்கள் தவம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2015

பலனளிக்காத கம்ப்யூட்டர் வசதிகள்:தனியார் இன்டர்நெட் மையங்களில் ஆசிரியர்கள் தவம்

அரசு வழங்கிய கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகள் இருந்தபோதும், பள்ளி மாணவர்கள் குறித்த புள்ளி விபரங்களை ஆன்-லைனில் சேர்க்கும் பணிக்காக ஆசிரியர்கள் தனியார் இன்டர்நெட் மையங்களில் தவம் கிடக்கின்றனர்.கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு 13 வகையான இலவச பொருட்களை அரசு வழங்குகிறது.


இது தவிர அரசு திறனாய்வுத்தேர்வு, உதவித்தொகை, பிற்பட்டோர், சிறுபான்மையின நலம் உள்ளிட்ட பிற துறைகள் சார்பில் மாணவர்களுக்குஉதவிகள் வழங்கப்படுகிறது. அரசு, தனியார், சிறுபான்மை பிரிவு சார்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த முழுமையான விபரங்களை, பல்வேறு வகைகளில் பட்டியலிட்டு வழங்க சம்பந்தப்பட்ட துறையினர் அறிவுறுத்துகின்றனர்.


குறைந்த கால அவகாசத்தில் கேட்கப்படும் தகவல்களை அளிக்க, பெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டர், இன்டர்நெட் சேவை இருந்தபோதும் பயன்பாடின்றியோ, பழுதுநீக்கம் செய்வதில் அலட்சியத்தாலோ காட்சிப்பொருட்களாக உள்ளன. சில பள்ளிகளில் இவற்றை இயக்குவதற்கான தொழில்நுட்ப திறன் வாய்ந்த ஊழியர்களோ, ஆசிரியர்களோ இல்லை. இதையடுத்து புள்ளி விபரங்களை ஆன்-லைனில் சேர்த்தல் பணிக்காக, பல்வேறு பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் தனியார் இன்டர்நெட் மையங்களில் தவம் கிடக்கும் அவலம் நீடிக்கிறது.ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ""அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பல ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள சூழலில், சொற்ப எண்ணிக்கையிலான ஆசிரியர்களும்பல்வேறு பணிகளுக்காக மாவட்ட கல்வித்துறை அலுவலகங்களுக்கு அழைக்கப்படுகின்றனர்.


பிற பணிகளில் கால விரயம் ஆவதால், வகுப்புகளில் பாடங்களை உரிய காலத்திற்குள் முழுமையாக நடத்தி முடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. தனியார் இன்டர்நெட் மையங்கள், கல்வித்துறை அலுவலகங்களுக்கு செல்வதால், பல பள்ளிகளின் தலைமையாசிரியர்களை எந்தவித பணிக்காகவும் தொடர்பு கொள்ள முடியாத நிலை நீடிக்கிறதுல '' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி