டி.என்.பி.எஸ்.சி., சுறுசுறு! நான்கு ஆண்டுகளுக்கு பின் 'ரிசல்ட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2015

டி.என்.பி.எஸ்.சி., சுறுசுறு! நான்கு ஆண்டுகளுக்கு பின் 'ரிசல்ட்'

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நான்கு ஆண்டுகளுக்கு முன் நடத்திய தேர்வுக்கு இப்போது முடிவுகளை வெளியிட்டு உள்ளது.தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு பொது சுகாதார பணியில் அடங்கிய 12 புள்ளியியலாளர் பதவிக்கு 2011 பிப். 26ல் தேர்வு நடத்தப்பட்டது; இதில் 1262 பேர் கலந்து கொண்டனர்; அதில் 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


அதன் விவரம் டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.தமிழ்நாடு மருத்துவ சார்நிலை பணியில் 49 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கு 2011 பிப்ரவரியில் நடத்திய தேர்வு நடந்தது; இதில் 2934 பேர் கலந்து கொண்டனர்; அதில் 61 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அதற்கான பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி