கடந்தாண்டு கலந்தாய்வில் பங்கேற்றவர் இந்தாண்டு பங்கேற்க முடியாது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2015

கடந்தாண்டு கலந்தாய்வில் பங்கேற்றவர் இந்தாண்டு பங்கேற்க முடியாது!

இந்தாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு ஆக., 12 முதல் செப்., 16 வரை நடக்கின்றன. இதற்காக ஆக.,7 வரை ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கலந்தாய்வில் பங்கேற்க சம்பந்தப்பட்ட ஆசிரியர் அந்த பள்ளியில் குறைந்தபட்சம் மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு 1.6.2012 தகுதி நாளாக அறிவிக்கப்பட்டது.


இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து குறைந்தபட்சம் ஒருகல்வியாண்டு போதும் என நிபந்தனை தளர்த்தப்பட்டது. இதன்படி 1.6.2014 தகுதி நாளாக அறிவுறுத்தப் பட்டது.ஆனால் கடந்தாண்டில் பங்கேற்றோர் இந்தாண்டு பங்கேற்க முடியாத நிலையுள்ளது.

2013-14ம் கல்வியாண்டு தாமதமாக ஜூன் 17ல் கலந்தாய்வு நடந்தது குறிப்பிடத்தக்கது. 2012-13 கல்வியாண்டு தாமதமாக கலந்தாய்வு நடந்தது. அதற்காக 2014ல் நடந்த கலந்தாய்வில் ஜூன் முதல் தேதி குறிப்பிடாமல் 'சிறப்பு தகுதி நாள்' அறிவிக்கப்பட்டது. இந்தாண்டிற்கு அதுமாதிரி அறிவிப்பு இல்லை. இதனால் கடந்தாண்டு கலந்தாய்வில் பங்கேற்றவர் இந்தாண்டு பங்கேற்க முடியாது. பதவி உயர்வு பெறுவதில் பிரச்னை இல்லை. மூன்று கல்வியாண்டு என்ற நிபந்தனை ஓராண்டாக குறைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இரண்டு ஆண்டுகள் பங்கேற்க முடியாது.

5 comments:

 1. கலந்தாய்வில் பங்கேற்க சிறப்பு தகுதி நாள் அறிவிக்கக் கோருவோம்

  ReplyDelete
  Replies
  1. yes.... We do something but time is very short.....

   Delete
 2. கலந்தாய்வில் பங்கேற்க சிறப்பு தகுதி நாள் அறிவிக்கக் கோருவோம்

  ReplyDelete
 3. Yes that's right , always confusion in G.Os

  ReplyDelete
 4. Dear senior teachers .please do something to include 2014 sep appointed pg teachers in counselling

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி