தொழில்நுட்பம் சார்ந்து, மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறார்.மக்கள்தொகை குறைவான இந்தக் கிராமத்தில் சிறப்பான கல்வி சேவையாற்றியதற்காக,கற்பித்தலில் புதுமை படைக்கும் தேசிய அளவிலான ஆசிரியர் விருதை, 2010-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கியது. மாணவர்களிடையே கற்றல் ஆற்றலை தூண்டும் வகையிலான ஓவியங்களை, பள்ளி வளாகத்தின் சுவர்கள், வகுப்பறைகள் என அனைத்து இடங்களிலும் அலங்கரித்துள்ளார். இவரின் ஓவியப் பயிற்சியின் பலனாக, கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை மாநில அளவிலான ஓவியப் போட்டிகளில் அப்பள்ளி மாணவர்கள் பரிசு பெற்றுள்ளனர்.சமச்சீர் பாடத் திட்டத்தின் கீழ், 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பாடத் திட்டத்தை, நவீன தொழில்நுட்பத்தில் மாற்றி மாணவ, மாணவிகள் எளிதாக கற்கும் வகையில் ஒலி, ஒளி அடிப்படையில் வீடியோ பாடங்களாக மாற்றியுள்ளார். அதன்படி, கழிவுநீக்க மண்டலம், சிறுநீரகத்தின் அமைப்புப் பணி மற்றும் வேலை, இருவித்திலை தாவர அமைப்பு, வேரின் அமைப்பு மற்றும் பணி, தனிம வரிசை அட்டவணை, காடுகள் மற்றும் வன விலங்குகள் உட்பட பல்வேறு பாடங்களை ஒலி, ஒளி காட்சிகளாக மாற்றி கற்பித்து வருகிறார்.இந்தத் திட்டத்துக்கு, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி