தமிழில் செய்திகளை அறிய உதவும் செயலி ‘வியூஸ்’ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2015

தமிழில் செய்திகளை அறிய உதவும் செயலி ‘வியூஸ்’

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் செய்திகளை அறிந்துகொள்ள உதவும் செயலியை (ஆப்ஸ்) ஹைதராபாதைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. `வியூஸ்’ என்ற பெயரிலான இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் செல்போனில் செய்திகளைஅவரவர்க்கு விருப்பமான பிராந்திய மொழிகளில் தெரிந்து கொள்ள முடியும்.


கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐ ஸ்டோரிலிருந்து இந்த செயலியை பதிவிறக்கம்செய்ய முடியும் என்று இதன் நிறுவனர் ஸ்ரீனி கொப்போலு தெரிவித்துள்ளார். இந்தியாவில் 10 பிராந்திய மொழிகளில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலியில் ஒரு லட்சத்துக்கும் மேலான செய்தி கள், பொதுவான செய்திகள், தொழில்நுட்பம் சார்ந்தவை, வணிகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஃபேஷன், சுற்றுலா மற்றும் அது சார்ந்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த செயலி காப்புரிமை பெறப்பட்டதாகும். 40 நாடுகளில், 2000 நகரங்களில் நிகழும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் இதில் நிச்சயம் இடம்பெறும் என்று அவர் மேலும்கூறினார். வியூஸ் செயலியை பின்வரும் இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்ய முடியும். இணையதள முகவரி www.veooz.com

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி