அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு: தாமதமின்றி நடத்தவலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2015

அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு: தாமதமின்றி நடத்தவலியுறுத்தல்

தமிழகம் முழுதும் அரசுக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றப் பொதுக் கலந்தாய்வை தாமதமின்றி நடத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலர் சி. திருச்செல்வம் வெளியிட்ட அறிக்கை:


தமிழகம் முழுதும் உள்ள 83 அரசுக்கல்லூரிகளில் சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியர்களுக்கான பணியிடமாற்றப் பொதுக் கலந்தாய்வை விதிகளுக்குட்பட்டு ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் நடத்துவது வழக்கம்.ஆனால், நடப்பு கல்வியாண்டு தொடங்கி இரண்டு மாதம் கடந்த பிறகும் இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை.


எனவே அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிடமாற்றப் பொதுக் கலந்தாய்வு (Transfer Counseling) உடனடியாக நடத்ததமிழக அரசு மேலும் தாமதிக்காமல் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், அரசு கல்லூரிகளில் பணியாற்றும் இரண்டாம் நிலை முதல்வர்களுக்கும் பணி மூப்பு அடிப்படையில் பொதுக் கலந்தாய்வு நடத்தி அவர்கள் பணியமர்த்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி