பகுதி நேர ஆசிரியர்கள் மாற்றுப்பணி ஆணை ரத்து! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2015

பகுதி நேர ஆசிரியர்கள் மாற்றுப்பணி ஆணை ரத்து!


மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரிகளால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப்பணிக்கான ஆணைகள் அனைத்தும், 16ம் தேதியுடன் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பணிநியமனம் ஆன பள்ளிகளில் பணிபுரிந்து மட்டுமே ஊதியம் பெறவேண்டும் என, மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும், பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணிநிரவலுக்கான விண்ணப்பங்களை, இன்று மாலைக்குள் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், 15 ஆயிரத்து 249 பகுதிநேர ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். கோவை மாவட்டத்தில், 365 பேர் பணியாற்றி வருகின்றனர்.

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களை தேவைப்படும் பள்ளிகளுக்கு பணி நிரவல் மூலம் மாற்றப்படவுள்ளனர். உபரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் செய்யப்படும் அனைத்து பள்ளிகளின் பட்டியல் தெரிவிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 50 கி.மீ., தொலைவுக்கு மேல் பயணம் மேற்கொண்டு பகுதி நேர ஆசிரியர்கள் பயணம் செய்யும் சூழல் உள்ளது. பணிநிரவலின் போது, அதிகாரிகள் ஆசிரியர்களின் வீடு மற்றும் பள்ளியின் தொலைவை கருத்தில் கொள்ளவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பணிநிரவல் செய்யப்படவுள்ள சூழலில், மாற்றுப்பணியில் உள்ள பகுதிநேர ஆசிரியர்கள் தாங்கள் பணி நியமனம் செய்யப்பட்ட பள்ளியின் சூழல்கள் அடிப்படையிலேயே, பணி நிரவல் செய்யப்படவுள்ளனர். முதன்மை கல்வி அதி காரிகளால் (சி.இ.ஓ.,) பல்வேறு காரணங்களால் மாற்றுப்பணி வழங்கப்பட்ட அனைத்து ஆணைகளும், 16ம் தேதியோடு ரத்து செய்வதாகவும், அவரவர் பணிநியமனம் செய்யப்பட்ட பள்ளிகளில் பணிபுரிந்தால் மட்டுமே ஊதியம் பெற முடியும் என, மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. ADMISSION OPEN FOR GOVT. UNIVERSITY

    M.Phil / Ph.D.,
    PART TIME / REGULAR

    CONTACT :
    SRI ANNAMALAIAYAR EDUCATIONAL TRUST,
    GUDIYATTAM, VELLORE DT.
    CELL : 9500838334 / 9566572757

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி