ராமநாதபுரம் மாவட்டம் 'பனிஷ்மென்ட் ஏரியா' என்ற மனநிலை அரசு ஊழியர்களை விட்டு அகலவில்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2015

ராமநாதபுரம் மாவட்டம் 'பனிஷ்மென்ட் ஏரியா' என்ற மனநிலை அரசு ஊழியர்களை விட்டு அகலவில்லை!

தலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வின்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 அரசு மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்ய, யாரும் முன்வரவில்லை. ஆசிரியர்களுக்கு மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் வேதாளை, ரெட்டையூரணி, புதுமடம், பெரியபட்டினம், எஸ்.பி.பட்டினம், சனவேலி, திருவாடானை, தொண்டி அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளிகள், மங்களக்குடி, பாண்டுகுடி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணியிடங்களை நிரப்ப ஆக., 12ல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் மற்றும் ஆக.,14ல் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது.புதுமடம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது.மற்ற பணியிடங்களை யாரும் தேர்வு செய்யவில்லை.கடந்த கல்வி ஆண்டு பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி அடைந்த பாண்டுகுடி அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட 12 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் தொடர்ந்து காலியாக உள்ளது.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டம் 'பனிஷ்மென்ட் ஏரியா' என்ற மனநிலை அரசு ஊழியர்களை விட்டு அகலவில்லை. கிராம மக்கள் நகருக்கும், நகர்ப்புற மக்கள் வளர்ந்த நகருக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலைவாய்ப்பை கருத்தில்கொண்டு ராமநாதபுரத்தில் பணியாற்ற யாரும் முன் வருவதில்லை.ஆசிரியர் பணியிட மாறுதலிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிட மாறுதலுக்கு பின் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம் மேலும் அதிகரிக்கும்' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி