ஆதார் அட்டையில் திருத்தம் செய்யும் வசதி விரைவில் இ - சேவை மையங்களில் அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2015

ஆதார் அட்டையில் திருத்தம் செய்யும் வசதி விரைவில் இ - சேவை மையங்களில் அமல்

தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம் துவக்கப்பட்டுள்ள, இ - சேவை மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. விரைவில், ஆதார் அட்டைதிருத்தம் மேற்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.கைரேகை: இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர் குமரகுருபரன் கூறியதாவது:


அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், தமிழகத்தில் உள்ள, 264 தாலுகா அலுவலகங்களிலும், தலா, ஒரு பொது இ - சேவை மையம் துவக்கப் பட்டுள்ளது. இந்த மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறலாம்.


ஆதார் அட்டை பெற ஏற்கனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து, ஒப்புகை சீட்டு பெற்றவர்கள், பொது இ - சேவை மையங்களுக்கு சென்று, ஒப்புகைச் சீட்டில் உள்ள, பதிவு எண்ணை தெரிவித்து, பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.ஏற்கனவே, ஆதார் எண் பெற்றவர்கள், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற, 30 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். பாஸ்போர்ட்:ஆதார் அட்டை பெற்றவர் கள், முகவரி மாற்றம் மற்றும் புகைப்பட மாற்றம் செய்ய விரும்பினால், அதை மேற்கொள்ளும் வசதி, விரைவில், பொது இ - சேவை மையத்தில் துவக்கப்படும். அதேபோல், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வசதியும், விரைவில் ஏற்படுத்தப் படும்.அரசு கேபிள், 'டிவி' மூலம், இணையதள இணைப்பு வழங்கும் பணியும், விரைவில் துவக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி