உச்சகட்ட குழப்பத்தில் உயர் கல்வித்துறை: சட்டசபையில் நாளை விடிவு கிடைக்குமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2015

உச்சகட்ட குழப்பத்தில் உயர் கல்வித்துறை: சட்டசபையில் நாளை விடிவு கிடைக்குமா?

தமிழக சட்டசபையில், உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம், நாளை நடைபெற உள்ளது. அப்போது, உயர் கல்வித்துறை குளறுபடிகளை நீக்கும் அறிவிப்புகள்வரலாம் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.உயர் கல்வித்துறை, கடிவாளமில்லாத குதிரை போல இயங்கி வருவதாக, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில், தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. பணி நியமனங்கள், பாடத்திட்டம் தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.


* சமீபத்தில் நடந்த உதவிப் பேராசிரியர் நியமனத்தில், தேர்வு விதிகள் மீறப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு, உயர் கல்வித்துறை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
* பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில் பேராசியர்களும், மாணவர்களும் எப்போது கல்லுாரிக்கு வருகின்றனர், செல்கின்றனர் என்பதை சரியாகக் கண்காணிக்காததால், வகுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல நேரங்களில், பேராசிரியர்களுக்குப் பதிலாக, ஆராய்ச்சி மாணவர்களே பாடம் எடுக்கும் நிலை உள்ளது.
* கல்லுாரி கல்வி இயக்குனர் பதவிக்கு, முறையான அறிவிப்பு செய்து தகுதியானவர்களின் விண்ணப்பங்களை பெற்று, விதிப்படி நிர்ணயம் செய்யப்படவில்லை;பொறுப்பு என்ற பெயரில், தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்து வருகின்றனர்.
* பல்கலை நிர்வாகப் பணிகளில், அதிக அளவுக்கு பேராசிரியர்களை நியமித்துள்ளதால், கற்பித்தலுக்கு, கல்லுாரிகள் போதிய அளவில் இல்லை.
* அரசு கல்லுாரிகளில் கவுரவப் பேராசிரியர்களுக்கான ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை.
* துணைவேந்தர் மற்றும் பதிவாளர்களை தேர்வு செய்வதில், தொடர்ந்து வெளிப்படைத்தன்மை இல்லை.
* அண்ணா பல்கலை, பாரதியார் பல்கலை, சென்னை பல்கலை என முக்கியமான பல்கலைகளில்பலர், பேராசிரியர் பணியை விட துறைத்தலைவர், பதிவாளர் அலுவலக அதிகாரிகள், துறைஇயக்குனர், கல்லுாரி முதல்வர் போன்ற பணிகளை கவனிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
* பாரதியார் பல்கலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, மாணவர்கள் போராட்டம் நடத்தும் நிலையில், எந்த விசாரணையும் நடத்தாமல் உயர் கல்வித்துறை அலட்சியம் காட்டி வருகிறது.
* தற்காலத்துக்கு ஏற்ற வகையில், பாடத்திட்டத்தை தரம் உயர்த்துவது, புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சர்வதேச அளவில் கலை, அறிவியல் கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இப்படி, உயர் கல்வித்துறை மீது அடுக்கடுக்காக பல புகார்கள் கூறப்படுவதால், நாளை தாக்கல் செய்யப்படும் மானிய கோரிக்கையின் போது, இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகலாம் என, பேராசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

8 comments:

 1. இதை எந்த வரிசையில் எழுத வேண்டும் தெரிந்தவர்கள் கூறவும்...
  D.T.E.d.,B.A., B.Ed.,

  B.A., B.Ed.,D.T.E.d. இவை இரண்டில் எது சரி ?

  ReplyDelete
 2. How college teacher recruitment procedure is unclear?

  ReplyDelete
  Replies
  1. As per the Judgement of the Honourable High court of Judicature at Madras W.P.No:21170 of 2012, Paragraph No: 14, the Honourable Judge S.Nagamuthu stated that “After identifying the number of vacancies earmarked for various categories, the selection for each category has to be made purely based on merit following the method detailed below:
   First Step:
   (i) As against the number of vacancies identified for open quota, irrespective of caste, sex, physically challenged, etc., everyone should be allowed to compete based on merits.
   (ii) The meritorious candidates should be first selected as against the above vacancies under open quota.
   Second Step:
   (iii) After completing the first step, moving on to the vertical reservation categories, selection has to be made for each category from amongst the remaining candidates belonging to the particular reserved category (vertical) based on merits.
   Third Step:
   (iv) After completing the second step, horizontal reservation which cuts across the vertical reservation has to be verified as to whether the required number of candidates who are otherwise entitled to be appointed under the horizontal reservation have been selected under the vertical reservation.
   (v) On such verification, if it is found that sufficient number of candidates to satisfy the special reservation (horizontal reservation) have not been selected, then required corresponding number of special reservation candidates shall have to be taken and adjusted/accommodated as against social reservation categories by deleting the corresponding number of candidates therefrom.
   (vi) Even while filling up the vacancies in the vertical reservation, if, sufficient number of candidates falling under the horizontal reservation have been appointed, then, there will be no more appointment exclusively under the horizontal reservation.
   Caution:
   (vii) At any rate, the candidates who were selected as against a post under open quota shall not be adjusted against the reserved quota under vertical reservations.

   was not followed by the TRB in the History subject selection list of Assistant Professors

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 3. Eraivan irukkirara avar kannukkul therikirara

  ReplyDelete
 4. அரசு வேலைக்கு தேர்வுகளையும் பணிநிமயனங்களையும் சரிவர நடத்த தெரியாத TRB யை கலைத்துவிட்டு TNPSC இடமே அந்த பொறுப்புகளை ஒப்படைக்கலாம் ...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி