TNPSC செவிலியர் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறையில் அதிகாரி பணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2015

TNPSC செவிலியர் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறையில் அதிகாரி பணி

தமிழக சுகாதாரத்துறையில் நேரடியாக நியமிக்கப்பட உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் நல அதிகாரி பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்: 11/2015 தேதி: 31.07.2015


பதவி: Maternal and Child Health Officer(குறியீட்டு எண்: 2030)


காலியிடங்கள் எண்ணிக்கை: 89

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: B.Sc.(Nursing) அல்லது B.Sc.(Public Health Nurse) முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,400 + தர ஊதியம் ரூ.4700

தேர்வு கட்டணம்: ரூ.175. இதனை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexamns.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2015

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.09.2015தாள் - I காலை 10 மணி முதல் 1 மணி வரையும். தாள் - II மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/11_2015_not_eng_mcho.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி