TNPSC - புள்ளியியல் உதவி இயக்குனர் பதவி ரிசல்ட்வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2015

TNPSC - புள்ளியியல் உதவி இயக்குனர் பதவி ரிசல்ட்வெளியீடு

டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி சார்பில் புள்ளியியல் உதவி இயக்குனர் பதவியில் காலியாக உள்ள 23 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு 2013ம் ஆண்டு நடந்தது.


இத்தேர்வுக்கான ரிசல்ட் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpscexams.net என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதே போல, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்(கிரேடு 3) பதவியில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு 2013ம்ஆண்டு நடந்தது. இந்த தேர்வுக்கான ரிசல்ட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 31ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள தவறினால், அவர்கள் அடுத்தக்கட்ட தேர்வு நிலைகளுக்கான தகுதியினை இழந்தவராகி விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி